Edappadi Palaniswami statedTVK govt renamed several schemes introduced by previous ADMK govt Ai generated
தமிழ்நாடு

”எங்கே நீங்கள் சொன்ன மாற்றம்?” : அதிமுக திட்டங்களுக்கு தவெக பெயர் ’இதுதான் மாற்றமா!’ : EPS கடும் விமர்சனம்...!

முந்தைய அதிமுக அரசு கொண்டு வந்த பல திட்டங்களுக்கு தவெக அரசு பெயரை மாற்றி இருப்பதாக, எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

Kannan

அதிமுக திட்டங்களுக்கு தவெக பெயர்

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு கொண்டு வந்த பல திட்டங்களுக்கு தற்போதைய தவெக அரசு பெயரை மாற்றி இருக்கிறது என்றார்.

நீங்கள் சொன்ன மாற்றம்?

இதுவா நீங்கள் சொன்ன மாற்றம்? புதிய திட்டங்களை கூட கொண்டு வர கூட முடியவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். மாற்றம் கொண்டு வருவோம் என ஆட்சிக்கு வந்துள்ள தவெக ஆட்சியில், மாற்றங்கள் எதுவுமே இதுவரை தென்படவில்லை.

'வெற்றி' அடைமொழி போதுமா?

பல திட்டங்களுக்கு 'வெற்றி' என்ற அடைமொழியை கொடுத்துள்ளீர்கள். மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள் மக்கள் பிரச்சினையை தீர்க்க புதிய யோசனை கூட உங்களிடம் தென்படவில்லை? என்றும் எடப்பாடி வினவினார்.

பேசினால் திட்டங்கள் கிடைக்கும்

பேசாமல் இருப்பது நல்லது தான்; ஆனால் சில நேரங்களில் பேசினால் தான் நமக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைக்கும்.

தமிழகம் முழுவதும் இயங்கி கொண்டிருக்கும் பழைய பேருந்துகளை விரைவில் மாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் ஏசி பேருந்துகள்

அதற்கு போக்குவரத்து அமைச்சர் பார்த்திபன் எழுந்து, தமிழகம் முழுவதும் இயங்கும் பஸ்கள் ஏசி பஸ்ஸாக இருக்க வேண்டுமென்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.T

ஏசி பேருந்துகள் - எடப்பாடி யோசனை

அதுபற்றி கேள்வி எழுப்பிய எடப்பாடி, தமிழ்நாடு முழுவதும் ஏ.சி. பேருந்து என்பது கேட்க நன்றாக உள்ளது; அமல்படுத்துவது எப்போது?. அதே போல நீங்கள் அனைத்தையும் ஏசி பேருந்தாக மாற்ற வேண்டும் என்பதில்லை, சாதாரண பேருந்துகளை புதிதாக வாங்கி இயக்கினாலே மக்கள் பாராட்டுவார்கள் என்றார்.

பயிர்க்கடனை தள்ளுபடி செய்க

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

3 மாதங்களில் 20,000 கோடி கடன்

தவெக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் |ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகள் முடியும்போது தமிழகத்தின் கடன்சுமை ரூ.20 லட்சம் கோடியாக கடன் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

நடந்தாய் வாழி காவிரி திட்டம்

விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும், அப்படி செய்தால் சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என்று, எடப்பாடி பழனிசாமி பேரவையில் உரையாற்றினார்.

=====================