Edappadi Palaniswami taken drastic step of expelling over a hundred supporters of C.V. Shanmugam from ADMK source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

”ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்” : சி.வி. சண்முகத்துக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி, பிளவை நோக்கி நகர்கிறதா அதிமுக...?

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

Kannan

அதிமுக தொடர் தோல்வி

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அவர் சந்தித்த சட்டமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் கட்சியானது தோல்வியை சந்தித்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி

குறிப்பாக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எடப்பாடி மீதான அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்த காரணமாக அமைந்து விட்டது. பிரிந்து சென்றவர்களை சேர்த்து கட்சியை ஒருங்கிணைக்க தவறி விட்டதாகவும், தவெகவுடன் கூட்டணிக்கு சென்று இருந்தால், அதிக இடங்களை கைப்பற்றி இருக்கலாம் அப்படின்னும் அதிருப்தியாளர்கள் பகிரங்கமாக பேசினார்கள்.

இடைத்தேர்தலிலும் படுதோல்வி

இரண்டாவதாக, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி, 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டது அதிமுக. இந்த இரண்டு தொகுதிகளும் பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற இடங்களாகும்.

அதிருப்தியாளர்கள் தீவிர ஆலோசனை

இதனால், சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களோடு சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தினர்.

பொதுக்குழுவை கூட்ட நிர்பந்தம்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், தேர்தல் தோல்விகள், அதற்கான காரணங்கள் பற்றி விவாதிக்க உடனடியாக பொதுக்குழுவை கூட்டணும், அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் அப்படின்னு சொல்லி இருந்தார்.

இது எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்பட்டது.

சி.வி.சண்முகம் தொடர்ந்து எதிர்ப்பு

இடைத்தேர்தலுக்கு முன்பே, தனித்து செயல்பட்டு வரும் சி.வி. சண்முகத்திற்கு செக் வைக்கும் விதமாக அவரது மாவட்ட செயலாளர் பதவியை பறித்த வேறு ஒருவரை நியமித்தார். அவரது ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டன.

சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கம்

பொதுக்குழுவை கூட்ட சி.வி. சண்முகம் அழைப்பு விடுத்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கட்சியிலிருந்து கூண்டோடு நீக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்

கட்சியின் கண்ணியத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் புதிய நிர்வாகிகளை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சி.வி. சண்முகம் அடுத்தகட்ட என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கு.

=====================