Education Minister Anbil Mahesh has final out tn board exam final exam time tabel. google
தமிழ்நாடு

’பொதுத்தேர்வு மாணவர்களின் கவனத்திற்கு’ : தேதியில் மாற்றம் இல்லை

TN Board Exam 10th 12th Time Table 2026 : பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையானது ஏற்கனவே குறிப்பிட்டது போல நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Rohini

பொதுத்தேர்வுகளுக்கான விரிவான புள்ளிவிவரங்கள் ,பாதுகாப்பு வழிமுறை வெளியீடு

TN Board Exam 10th 12th Time Table 2026 : அவர் குறிப்பிட்டுள்ளது போல் மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7,99,692 பள்ளி மாணவர்கள் மற்றும் 27,783 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,27,475 பேர் 3,412 மையங்களில் எழுதுகின்றனர்.

அதேபோல், மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறும் 11-ம் வகுப்பு அரியர் தேர்வை 25,051 மாணவர்கள் 2,615 மையங்களில் எழுத உள்ளதாகவும் கூறினார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஆண்டு , 8,82,806 பள்ளி மாணவர்கள் மற்றும் 26,196 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9,09,002 பேர் 4,219 மையங்களில் தேர்வு எழுத உள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறைவாசிகளும் தேர்வு எழுத ஏற்பாடு

சிறைவாசிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 12-ம் வகுப்புத் தேர்வை 281 பேரும், 10-ம் வகுப்புத் தேர்வை 395 பேரும் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 17,61,528 மாணவர்கள் இந்த ஆண்டு பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்தார் .

தேர்வுப் பணிகளை கண்காணிக்க சிறப்பு குழு ஏற்பாடு

தேர்வுப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளவதற்கு தினசரி 49,000 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் . முறைகேடுகளைத் தவிர்க்கவும், தேர்வை முறையாகக் கண்காணிக்கவும் 4,900-க்கும் அதிகமான பறக்கும் படை குழுக்கள் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சாதாரண கால்குலேட்டர் அனுமதி

இந்த ஆண்டு முதல் மாணவர்கள் எதிர்கொள்ளும் கணக்குப் பதிவியல் தேர்வுக்கு சாதாரண கால்குலேட்டர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் பாதுகாப்பு

வினாத்தாள் பாதுகாப்பு கருதி தேர்வு அறையிலேயே மீதமுள்ள தாள்களைச் சீல் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதும் புத்தகம் மாற்றம்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வை எளிதாக எதிர்கொள்ள பெரிய எழுத்துக்களில் லாகரிதம் புத்தகங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உறுதிப்படத் தெரிவித்தார்.

அடிப்படை வசதிக்கான ஏற்பாடு

தேர்வு மையங்களில் அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார், மேலும் கடந்த ஆண்டு தேர்வின் போது நிகழ்ந்த எந்த குறைபாடுகளும் இந்த தேர்வின் போது நடைபெறாது எனவும் கூறியுள்ளார்.

மாணவர்களிடையே முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு

பொதுத்தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் , திருப்புதல் தேர்வுகளிலேயே OMR தாள்களைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்த பின்னரே தேர்வுத் தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்தார்.