Egmore Railway Station Redevelopment Work Nears Completion: Suburban Train Services to Normalize Today ! source : google
தமிழ்நாடு

எழும்பூர் பணிகள் நிறைவு : வழக்கம் போல் இயங்கும் புறநகர் மின்சார ரயில்கள் : பயணிகள் மகிழ்ச்சி!

Egmore Railway Station Renovation Work : கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் அமலில் இருந்த தற்கால மின்சார ரயில் அட்டவணை ரத்து செய்யப்பட்டு, வழக்கம் போல பழைய அட்டவணை அமல் படுத்தப்பட்டுள்ளது.

S Kavitha

Egmore Egmore Railway Station Redevelopment Work Nears Completion : Suburban Train Services to Normalize Today !

எழுப்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதிகாலை முதல் வழக்கம் போல் இயங்கும் ரயில்சேவை

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே முடிக்கப்பட்டதால் ஏப்.5 ஆம் தேதி முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று காலை முதலே வழக்கம் போல் பழைய அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட்டன.

வார நாட்களில் 212, ஞாயிற்றுக்கிழமையில் 190 ரயில்கள்

அதன்படி வார நாட்களில் சென்னை கடற்கரை - தாம்பரம் செங்கல்பட்டு என இரு மார்க்கத்திலும் 212 மின்சார ரயில் சேவையும், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை கடற்கரை - தாம்பரம் செங்கல்பட்டு என இரு மார்க்கத்திலும் 190 ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

பழைய அட்டவணை ரத்து

இதன்மூலம் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதிமுதல் அமலில் இருந்த தற்கால மின்சார ரயில் அட்டவணை ரத்து செய்யப்பட்டு, வழக்கம் போல பழைய அட்டவணை அமல் படுத்தப்பட்டுள்ளது.

இன்றுமுதல் 10 மற்றும் 11 ஆம் நடைமேடைகளில் இருந்து வழக்கம் போல் புறநகர் ரயில்கள் இயக்குகிறது.

மேம்பால நிழற்குடைகள், சாய்வு பாலம் அமைக்கும் பணி

மேலும், மேம்பாலத்தில் நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் இரவு நேரத்தில் நடைபெற உள்ளது.

அதேபோல் சாய்வு பாலம் அமைக்கும் பணிகளும் அடுத்த 15 நாட்களில் நிறைவு பெறும் என்றுஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் பயணிகள் நிம்மதி

இன்று அதிகாலை முதல் வழக்கம் போல் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாலும், இனிமேல் பயணிகள் சிரமங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை இல்லை என்பதாலும் மிகுந்த மகிழ்ச்சியில் பயணம் செய்கின்றனர்.

===