Election campaigning in Tamil Nadu ends tomorrow, let's take a look at the regulations come into effect  google
தமிழ்நாடு

TN Election : நாளை மாலை தேர்தல் பரப்புரை நிறைவு : அமலுக்கு வரும் விதிமுறைகள் எவை : வாங்க தெரிஞ்சுக்கலாம்!

தமிழகத்தில் நாளை மாலையோடு தேர்தல் பரப்புரை முடிவுக்கு வரும் நிலையில், அதன்பிறகு அமலுக்கு வரும் விதிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

Kannan

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 6 மணியோடு ஓய்கிறது. 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நான்கு முனை போட்டி நிலவும் தேர்தலில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், பிரசாரம் முடிவடைந்த உடன், அமலுக்கு வரும் தேர்தல் விதிமுறைகள் அடங்கிய பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார் :

* தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

* ஏப்ரல் 21ம் தேதி மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்.

* தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டம், ஊர்வலம், நடத்துவதோ, பங்கேற்பதோ கூடாது.

* தேர்தல் விவகாரத்தை திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது.

* குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்புக்கும் இது பொருந்தும்.

* பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், இசை நிகழ்ச்சி, திரையிடல், பொழுதுபோக்கு நிகழ்ச்சி எதையும் நடத்தி பரப்புரை செய்யக் கூடாது.

* விதிமுறைகள் மீறப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனை.

* தொகுதிக்கு வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் ஏப். 21 ஆம் தேதி அன்று மாலை 6.00 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

* கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.

* வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், ஏப்ரல் 21ம் தேதி மாலை 6.00 மணி முதல் செயல் திறனற்றது ஆகிவிடும்.

* வாக்குப்பதிவு அன்று வேட்பாளர் பயன்படுத்தும் வாகனம், உடன் வரும் வாகனங்களுக்கான உரிய அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.

* வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர, வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கு, வேட்பாளர் அல்லது அவரது வாகனங்களை பயன்படுத்தக் கூடாது.

* 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.

=================