Election Commission announced by-elections for Maduranthakam, Dharapuram constituencies in October 6  google
தமிழ்நாடு

”மதுராந்தகம், தாராபுரம்” : அக்.6ல் இடைத்தேர்தல், மனுத்தாக்கல் நாளை தொடக்கம் : யாருக்கு வாய்ப்பு? எகிரும் எதிர்பார்ப்பு!

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

Kannan

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இருக்கிறது. 2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள்

அதிமுகவில் இருந்து மதுராந்தகம் (தனி) எம்.எல்.ஏ. மரகதம் குமாரவேல், தாராபுரம் (தனி) எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா...

விராலிமலை எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் மற்றும் கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.

7 தொகுதிகள் காலி

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில், திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஏழு தொகுதிகளும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்

ஏழு தொகுதிகளுக்கும் எப்போது இடைத் தேர்தல் நடத்தப்படும் எனும் எதிர்பார்ப்பு இருந்துவந்த நிலையில், தற்போது தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

அதன்படி இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி நிறைவடையும். வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 16ஆம் தேதி.

அக். 6ம் தேதி வாக்குப்பதிவு

வாக்குப் பதிவு அக்டோபர் 6ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

5 தொகுதிகளில் எப்போது தேர்தல்?

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர்த்து மற்ற ஐந்து தொகுதிகள் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்திருப்பதாக தெரிகிறது.

===============