Election Commission announced people can check whether their name is in the draft voter list through websites  
தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கா? : வாங்க சரி பார்க்கலாம்!

வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா என்று 3 இணையதளங்கள் மூலம் சரி பார்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Kannan

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்

மேற்கு வங்கம், புதுச்சேரியில் சில தினங்களுக்கு முன்பு எஸ்ஐஆர் பணிகள் நிறைவு பெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

97.37 லட்சம் பேர் நீக்கம்

எஸ்.ஐ.ஆர். பணி மூலம் தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்களை நீக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த அக்oஓபர் ​27ம் தேதி நில​வரப்​படி, 6.41 கோடி வாக்​காளர்​கள் இருந்த நிலை​யில், தற்​போது 5.44 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

ஜன. 18 வரை பெயர் சேர்க்கலாம்

பட்​டியலின் அடிப்​படை​யில், தகு​தி​யுள்ள வாக்​காளர்​களை புதி​தாக சேர்க்க அல்​லது தகு​தி​யற்ற வாக்​காளர்​களை நீக்க எந்த ஒரு வாக்​காள​ரும், அரசி​யல் கட்​சி​யும் தங்​கள் ஆட்​சேபனை​களை டிச.19-ம் தேதி (நேற்​று) முதல் ஜன 18ம் தேதி வரை தாக்​கல் செய்​ய​லாம். இதை ஆய்வு செய்ய 234 வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள், 1,776 உதவி வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள் பணி​யில் உள்​ளனர்.

படிவம் 6-ஐ வழங்கலாம்

இந்த கால​கட்​டத்​தில், வரைவு வாக்​காளர் பட்​டியலில் இடம் பெறாதவர்​கள், வரும் ஜன.1-ம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்​காளர்​கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்​கலாம். வாக்​காளர் பட்​டியலில் நிரந்தர இடமாற்ற பதிவு​கள், உயி​ரிழந்​தோர் உள்​ளிட்ட ஆட்​சேபனை தொடர்​பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்​து கொடுக்கலாம்.

தொகு​தி​களி​லேயே ஒரு இடத்​தில் இருந்து மற்​றொரு இடத்​துக்கு குடிபெயர்ந்து புதிய வசிப்​பிடத்​தில் உள்​ளவர்​களும், வேறு தொகு​திக்கு குடிபெயர்ந்​தவர்​களும் படிவம் 8-ஐ பூர்த்தி செய்​தும், அதற்​கான ஆவண ஆதார நகல்​களை இணைத்து வாக்​காளர் பதிவு அலு​வலரிடம் சமர்ப்​பிக்​கலாம்.

இணைய தளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்

www.elections.tn.gov.in என்ற இணை​யதளம் மூல​மாக​வும், பெயர் சேர்த்​தல், நீக்​கம், திருத்​தங்​கள் மேற்​கொள்​ளலாம். தமிழகத்​தில் 68,467 வாக்​குச்​சாவடிகள் இருந்த நிலை​யில், தற்​போது புதி​தாக 6,568 வாக்​குச் ​சாவடிகள் உரு​வாக்​கப்​பட்​டு, மொத்​தம் 75,035 சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

வாக்காளர்கள் எண்ணிக்கை 5,43,76,756

தமிழகத்​தில் கடந்த அக்​.27 நில​வரப்​படி, 6 கோடியே 41 லட்​சத்து 14 ஆயிரத்து 584 வாக்​காளர்​களின் பெயர்​கள் இடம்​பெற்​றிருந்​தன. நடந்து முடிந்த எஸ்​ஐஆர் திருத்​தத்​தின்​படி, தமிழகத்​தில் 2,66,63,233 ஆண் வாக்​காளர்​கள், 2,77,06,332 பெண் வாக்​காளர்​கள், 7,191 இதர வாக்​காளர்​கள் என மொத்​தம் 5 கோடியே 43 லட்​சத்து 76 ஆயிரத்து 756 வாக்​காளர்​களின் பெயர்​கள் வரைவுவாக்​காளர் பட்​டியலில் இடம் பெற்​றுள்​ளன.

சோழிங்கநல்லூரில் அதிகம் பேர் நீக்கம்

உயிரிழந்த வாக்​காளர்​கள் 26,95,672 பேர், இடம்​பெயர்ந்​தோர் மற்​றும் குறிப்​பிட்ட முகவரி​யில் வசிக்​காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்​காளர்​கள் 3,98,278 பேர் என மொத்​தம் 97 லட்​சத்து 37 ஆயிரத்து 831 வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. அதி​கபட்​ச​மாக சோழிங்​கநல்​லூர், பல்​லா​வரம், ஆலந்​தூர் தொகு​தி​களில் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர்.

அதிகம் பேர் நீக்கம் - சென்னை முதலிடம்

எஸ்​ஐஆர் பணி​களில் அதி​கபட்​ச​மாக சென்னை மாவட்​டத்​தில் 14.25 லட்​சம் பேரும், குறைந்​த​பட்​ச​மாக அரியலூர் மாவட்​டத்​தில் 24,368 பேரும் நீக்​கப்​பட்​டுள்​ளனர்.

இணைய தளங்களில் சரிபார்க்கலாம்

www.elections.tn.gov./SIR_2026.aspx இணையதளத்தில் தங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கலாம். voters.eci.gov.in/dowload-eroll என்ற இணையதளத்தில் தங்கள் பெயர் உள்ளதா என சரி பார்க்கலாம்.

electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து சரிபார்க்கலாம். erolls.tn.gov.in/asd/ என்ற இணையதளத்தில் எஸ்.ஐ.ஆர். பணி மூலம் நீக்கப்பட்டவர்களின் பெயர்களை அறியலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

=======================