தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் வருகிற 23ம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால், அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தபால் வாக்குகள் பதிவு
படிவம் 12டி பயன்படுத்தி, தேர்தல் பணியில் உள்ள அரசு அலுவலர்கள் தபால் ஓட்டு செலுத்துவார்கள். 85 வயது மேற்பட்ட, 1.20 லட்சம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 70,000 என மொத்தம் 1.90 லட்சம் படிவங்களை பெற்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
துணை ராணுவம் வருகை
115 துணை ராணுவ கம்பனிகள் வந்து சேர்ந்துள்ளது. மீதம் உள்ள 63 கம்பெனி ஓரிரு நாட்களில் வர உள்ளனர்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3579 பேர், பெண்கள் 443 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.
பூத் சிலிப் விநியோகம்
வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய கைப்பேசி எண்ணில் இருந்து 1950, EPIC நம்பர் ஒரு இடைவெளி மற்றும் வாக்காளர் எண்ணை பதிவு செய்து குறுஞ்செய்தி அனுப்பினால், உங்கள் வாக்கு உள்ளதா என்பது குறித்து முழு தகவல் அளிக்கப்படும்.
75,000 வாக்குச்சாவடிகள்
தமிழகத்தில் 75,032 வாக்கு சாவடிகள் இருந்த நிலையில் தற்போது வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 75,064ஆக உயர்ந்து உள்ளது.
இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 5,938 என அடையாளம் காணப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள்
இந்த முறை 140 சட்டமன்ற தொகுதிகளில் ஒரே ஒரு வாக்குப்பதிவு இயந்திரமும், 89 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரமும், பெரம்பூர், கொளத்தூர், ஆர்.கே.நகர் ஆகிய 3 தொகுதிகளில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும், கரூரில் மட்டும் அதிகபட்சமாக 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
1.40 லட்சம் பேர் பாதுகாப்பு
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 1.40 லட்சம் காவல் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஊர்க்காவல் படையினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 3.40 லட்சம் பேர் தேர்தல் பணிகளி ஈடுபடுப்பட்ட இருக்கிறார்கள்.
டிரோன் மூலம் கண்காணிப்பு?
21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் விடுமுறைவிட உத்தரவிடப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்களை கண்காணிப்பதற்கு ‘டிரோன்’ பறக்க விடுவது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
ரூ.727 கோடி பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.727 கோடி தேர்தல் தொடர்பாக பணம், நகைகள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பணமாக 126 கோடி ரூபாயும், 2 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், ரூ.75 கோடி மதிப்பிலான போதை பொருட்கள், ரூ.295 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள், ரூ.227 கோடியில் இலவச பரிசு பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
========================