Election Commission ordered preparatory arrangements to conduct by-elections in TN google
தமிழ்நாடு

TN By-election : 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் : முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்திய தேர்தல் ஆணையம்...!

தமிழகத்தில் காலியாக இருக்கும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேவையான, முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Kannan

திருச்சி கிழக்கு காலியானது

தமிழக சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்​கு, பெரம்​பூர் ஆகிய 2 தொகு​தி​களில் முதல்​வர் விஜய் போட்டி​யிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி எம்​எல்ஏ பதவியை அவர் ராஜி​னாமா செய்​தார்.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா

தவெக அரசுக்கு மீதான நம்பிக்கை வாக்​கெடுப்​பில் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்த அதி​முக உறுப்​பினர்​கள் எஸ்​.ஜெயகு​மார் (பெருந்துறை), மரகதம் குமரவேல்​ (மது​ராந்​தகம்), பி.சத்​தி​ய​பா​மா (​தா​ராபுரம்), இசக்கி சுப்பையா (அம்​பாச​முத்​திரம்) ஆகியோர் தங்கள் பதவி​களை ராஜினாமா செய்​து​விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டனர்.

இதையடுத்து திருச்சி கிழக்கு, பெருந்​துறை, மது​ராந்​தகம், தாராபுரம், அம்​பாச​முத்​திரம் ஆகிய தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டன.

5 தொகுதிகளில் இடைத்தேர்தல்

ஒரு தொகுதி காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டால், அதிலிருந்து 6 மாதங்​களில் இடைத்​தேர்​தல் நடத்​த வேண்​டும். அதன்​படி 5 தொகு​தி​களுக்கு இடைத்​தேர்​தல் விரை​வில் நடை​பெற இருக்கிறது.

தேர்தல் அதிகாரிகள் நியமனம்

அதற்​கு தேவையான முன்​னேற்​பாடு​களை ஜூன் 22ம் தேதிக்​குள் செய்​யு​மாறு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. 5 தொகு​தி​களுக்​கும் தேர்​தல் நடத்​தும் அதி​காரி​களை​யும் தேர்​தல் ஆணை​யம் நியமித்​துள்​ளது.

விரைவில் தேர்தல் தேதி

இதுதொடர்​பாக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக், சம்​மந்​தப்​பட்ட மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கையில், “ காலி​யாக உள்ள 5 தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தல் அட்​ட​வணையை தேர்​தல் ஆணை​யம் எப்​போது வேண்​டு​மா​னாலும் அறிவிக்​கக்​கூடும்.

விதிமுறைகளை பின்பற்ற உத்தரவு

எனவே, அதற்​கான அனைத்து ஏற்​பாடு​களை மாவட்ட நிர்​வாகங்​கள் முன்​கூட்​டியே மேற்​கொள்ள வேண்​டும். தேர்​தல் ஆணை​யம் ஏற்​கெனவே வெளி​யிட்​டுள்ள தேர்​தல் நடத்தை விதி​முறை​களை முறை​யாக பின்​பற்ற வேண்​டும்.

நடத்தை விதிகள் அமலுக்கு வரும்

தேர்​தல் நடை​பெறும் தொகுதி மாநக​ராட்சி அல்​லது நகராட்சி எல்​லைக்​குள் அமைந்​திருந்​தால், அந்த குறிப்​பிட்ட தொகு​திக்​குள் மட்​டும் தேர்​தல் நடத்தை விதி​கள் அமல்​படுத்​தப்​படும்.

அதே​நேரம் ஊரகப் பகு​தி​களை உள்​ளடக்​கிய தொகு​தி​யாக இருந்​தால், அந்த மாவட்​டம் முழு​மைக்​கும் தேர்​தல் நடத்தை விதி​கள் பொருந்​தும்.

அதிகாரிகள் இடமாற்றம்

தங்​கள் சொந்த தொகு​தி​களில் பணிபுரி​யும் அதி​காரி​கள் அல்​லது கடந்த 4 ஆண்​டு​களில் மூன்று ஆண்​டு​களுக்கு மேல் ஒரே இடத்​தில் பணி​யாற்​றிய அதி​காரி​கள் உடனே மாற்​றப்பட வேண்​டும்.

இது வரு​வாய் துறை அலு​வலர் மட்​டுமின்​றி, துணை ஆட்​சி​யர், தாசில்​தார் உள்​ளிட்​டோருக்​கும் பொருந்​தும். காவல்​துறை​யில் துணை காவல் கண்​காணிப்​பாளர், ஆய்​வாளர் மற்​றும் அதற்கு இணை​யான களப் பணி​யாளர்​களுக்​கும் இந்த விதி​முறை​கள் அமலாகும்.

அதே​போல், 5 தொகு​தி​களுக்​கும் தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் மற்​றும் உதவி தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அவர்​கள் தற்​போது பணி​யில் உள்​ளன​ரா, அந்​தத் தொகு​தி​களின் பகு​தி​கள் வேறு மாவட்​டங்​களில் உள்​ளன​வா, மாநக​ராட்சி எல்​லைக்​குள் வரு​கிறதா போன்ற விவரங்​களை சம்​பந்​தப்​பட்ட மாவட்ட ஆட்​சி​யர்​கள் உடனே தெரிவிக்க வேண்​டும்.

பணிகளை ஒருங்கிணைக்க உத்தரவு

இடைத்​தேர்​தலுக்​கான தயாரிப்பு பணி​களின் ஒரு பகு​தி​யாக தேர்​தல் ஆணை​யம் வழங்​கிய படிவங்​கள் மூலம் தேவை​யான அனைத்து விவரங்​களை​யும் ஜூன் 22-ம் தேதிக்​குள் அனுப்பி வைக்க வேண்​டும்” இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

பரபரப்பாகும் அரசியல் களம்

இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டால், தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகும். தவெக யாரை நிறுத்த போகிறது? தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? திமுக, அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடுமா? சீமானின் நிலைப்பாடு என்ன? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. அனைத்துக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பின் மூலம் விடை கிடைத்து விடும்.

=====