Election Commission told in Delhi High Court that the PMK's mango symbol cannot be allocated to Ramadoss or Anbumani faction PMK
தமிழ்நாடு

ராமதாஸ் vs அன்புமணி : ”மாம்பழம் சின்னம், NO சொன்ன தேர்தல் ஆணையம்"

PMK Party Mango Symbol Issue : பாமகவின் மாம்பழ சின்னத்தை ராமதாஸ், அன்புமணி தரப்புக்கு ஒதுக்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

Kannan

ராமதாஸ் vs அன்புமணி

PMK Party Mango Symbol Issue : பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ், அன்புமணி இடையிலான அதிகார மோதல் உச்சக் கட்டத்தை எட்டி இருக்கிறது. அன்புமணி தான் பாமக தலைவர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததால், அதிருப்தி அடைந்த ராமதாஸ், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு

தேர்தல் ஆணையம் போலி ஆவணம் கொடுத்து பாமகவை அபகரித்து விட்டதாக ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணை வந்தபோது, தமிழகத்தில் தேர்தல் நடந்தால் பாமகவில் யார் அங்கீகரிக்கும் வேட்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்கும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

  • எங்களிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் அன்புமணியை தலைவராக ஏற்றோம்.

  • இதில் பிரச்சினை இருக்கிறது என்றால் அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம்.

  • பாமகவில் தலைமை பிரச்சினை நீடித்து வருகிறது.

  • ராமதாஸ், அன்புமணி இடையில் பிரச்சினை தொடர்ந்தால் படிவம் ஏ, பி ஆகிய இரண்டிலும் இரு தரப்பும் கையெழுத்து போடுவதை ஏற்க இயலாது.

  • எனவே ராமதாஸ் தரப்பிற்கோ, அன்புமணி தரப்பிற்கோ மாம்பழம் சின்னத்தை ஒதுக்க முடியாது

  • கட்சியினர் இடையே நிலவும் பிரச்சினையில் தேர்தல் ஆணையத்தை யாரும் குறை சொல்ல முடியாது

  • அந்தச் சூழலில், பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படும்.

மாம்பழம் சின்னம் முடக்கம் ?

எனவே வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கும் பாமகவிற்கு புதிய சின்னம் ஒதுக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இது இருதரப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தொண்டர்களை சோர்வடைய செய்யும். இது வெற்றி வாய்ப்பை கேள்விக் குறியாக்கி விடும்.

சிவில் நீதிமன்றம் போங்க!

இதனிடையே, தே்ர்தல் ஆணையத்தின் பதிலை தொடர்ந்து ராமதாஸ் தரப்பு சிவில் நீதிமன்றத்தை நாட டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

=====