Election observers to arrive in Tamil Nadu on May 2 to monitor 2026 election vote counting  google
தமிழ்நாடு

தேர்தல் 2026:வாக்கு எண்​ணிக்​கையை மேற்​பார்வையிட தேர்தல் பார்​வை​யாளர்​கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகை!

தமிழகம் முழு​வதும் 62 மையங்​களில் மே 4-ம் தேதி நடை​பெறும் வாக்கு எண்​ணிக்​கையை மேற்​பார்வையிட தேர்​தல் பார்​வை​யாளர்​கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகின்​றனர்.

Rohini

சட்டப்பேரவை தேர்தல்

இந்தியாவில் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் இறுதியாக நிறைவு பெற்றுள்ளது. அசாம் , புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு முன்னதாக ஒரே கட்டமாக தேர்தலானது நடைபெற்றது.

பின்னர் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேற்றஹ்லனது நடைபெற்றது, இதில் இரு கட்டமாக மேற்கு வணக்கத்திற்கு தேர்தலானது நடைபெற்றது.

அனைத்து கட்சிகளின் தீவிர பரப்புரை பிரச்சாரத்திற்கு பிறகு ஐந்து மாநிலங்களுகுகன் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

ஐந்து மாநில தேர்தல் : வாக்கு பதிவு

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலுக்கான வாக்கு பதிவு எண்ணிக்கை வருகிற 4 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து வாக்கு மையங்களிலும் ,வாக்கு எண்ணுபவர்க்ளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன

வாக்கு பதிவு முன்நடவடிக்கை ;தமிழகம் வரும் தேர்தல் அதிகாரிகள்

சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்து இருக்கும் நிலையில் ,தமிழகம் முழு​வதும் 62 மையங்​களில் மே 4-ம் தேதி நடை​பெறும் வாக்கு எண்​ணிக்​கையை மேற்​பார்வையிட தேர்​தல் பார்​வை​யாளர்​கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகின்​றனர்.

பதற்றமின்றி நடந்து முடிந்த தேர்தல்

குறிப்பாக தமிழகத்​தில் உள்ள 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கும் கடந்த ஏப்​.23-ம் தேதி தேர்​தல் நடை​பெற்​றது.

எவ்​வித அசம்​பா​விதம், மறு வாக்​குப்​ப​தி​வும் இன்றி நடை​பெற்று முடிந்த இந்த தேர்​தலில் முன்​னெப்​போதும் இல்​லாத அளவு 85.10 சதவீதம் வாக்​கு​கள் இந்த தேர்தலில் பதி​வாகி​யுள்​ளன.

கண்காணிப்பில் வாக்கு மையங்கள்

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து அனைத்து வாக்கு சாவடி மையங்களும் தீவிர கண்காணிப்பில் , தேர்தலை ஆணையத்தின் பேரில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

தேர்​தல் பாது​காப்​புப் பணிக்கு வந்த துணை ராணுவப் படை​யினரில் ஒரு பிரி​வினர் அனைத்து வாக்கு எண்​ணும் மையங்​களி​லும் பாது​காப்​புக்கு நிறுத்​தப்​பட்​டுள்​ளனர்.

வாக்கு எண்ணிக்கை : பாதுகாப்பு தீவிரம்

மே 4 ம் தேதி தமிழகத்தில் உள்ள அணைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் , பாதுகாப்பு கருதி 18 ஆயிரம் போலீ​ஸார் பணி​ய மர்த்​தப்​பட்​டுள்​ளனர்.

முதலில் தபால் வாக்கு எண்ணப்படும்

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று , முதலில் தபால் வாக்கு எண்​ணிக்கை தொடங்​கப்​படும். அதன்​பின் மின்​னணு இயந்​திரங்​களில் பதி​வான வாக்​கு​கள் எண்​ணப்​படும் என்று தெரிவிக்கப்பட்டுள்​ளது.

தமிழகம் வரும் பார்​வை​யாளர்​கள்

தேர்​தல் பார்​வை​யாளர்​கள் வாக்கு எண்​ணிக்​கையை மேற்​பார்​வை​யிட வரும் மே 2-ம் தேதி தமிழகம் வரு​கின்​றனர். இதற்கு முன்னர் 62 மையங்​களி​லும் பணி​யாற்​றும் வாக்கு எண்​ணிக்கை அலு​வலர்​களுக்​கான தேர்வு அந்​தந்த மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள் முன்​னிலை​யில் ஏற்​கெனவே நடை​பெற்று முடிந்​துள்​ளது.

இந்​நிலை​யில், நேற்று தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தலை​மை​யில், சென்​னை​யில் 234 தொகு​தி​களுக்​கு​மான வாக்கு எண்​ணிக்கை அலு​வலர்​களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்​டது.

===========