https://x.com/TNDIPRNEWS
தமிழ்நாடு

சென்னையில் மின்சாரப் பேருந்துகள் : வழித்தடங்கள் விவரம்

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

MTM

120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களின் விவரம் வருமாறு :

வழித்தட எண் (2B) - கவியரசு கண்ணதாசன் நகர் முதல் எம்.கே.பி. நகர் – சத்தியமூர்த்தி நகர் – வள்ளலார் நகர் – யானைகவுனி, சென்னை சென்ட்ரல் – பல்லவன் சாலை – மன்றோ சிலை – போர் நினைவு சின்னம் - அண்ணா சதுக்கம் வழியாக கவியரசு கண்ணதாசன் நகர் வரை (சுற்றுப் பேருந்து) 10 பேருந்துகள்

வழித்தட எண் (C33) – கவியரசு கண்ணதாசன் நகர் – கடற்கரை ரயில் நிலையம் – பிராட்வே – நேரு விளையாட்டு அரங்கம்- புளியந்தோப்பு – மூலக்கடை – வியாசர்பாடி வழியாக கவியரசு கண்ணதாசன் நகர் வரை (சுற்றுப் பேருந்து) 5 பேருந்துகள்

வழித்தட எண் (C64) - கவியரசு கண்ணதாசன் நகர் முதல் வியாசர்பாடி – சர்மா நகர் – ஜமாலியா – வள்ளலார் நகர் – எம்.கே.பி நகர் வழியாக கவியரசு கண்ணதாசன் நகர் வரை (சுற்றுப் பேருந்து) 5 பேருந்துகள்

வழித்தட எண் (18A) - பிராட்வே முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை 20 பேருந்துகள், வழித்தட எண் 37 - வள்ளலார் நகர் முதல் பூவிருந்தவல்லி வரை 10 பேருந்துகள்

வழித்தட எண் (46G) - எம்கேபி நகர் முதல் எம்.ஜி.ஆர். கோயம்பேடு பேருந்து நிலையம் வரை 10 பேருந்துகள்,வழித்தட எண் (57) - வள்ளலார் நகர் முதல் செங்குன்றம் வரை 10 பேருந்துகள், வழித்தட எண் (57X) - வள்ளலார் நகர் முதல் பெரியபாளையம் வரை 10 பேருந்துகள், வழித்தட எண் (164E) - பெரம்பூர் முதல் மணலி வரை 10 பேருந்துகள்,

வழித்தட எண் (170TX) - MKB நகர் முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை 20 பேருந்துகள், வழித்தட எண் (170C) - திரு.வி.க. நகர் முதல் கிண்டி திரு.வி.க. எஸ்டேட் வரை 10 பேருந்துகள், என மொத்தம் 120 பேருந்துகள் இயக்கப்படுகிறது.