electronic ballot boxes used in the voting have been placed in the centers with heavy security google
தமிழ்நாடு

62 இடங்களில் எண்ணிக்கை மையங்கள் : பாதுகாப்புடன் மின்னணு இயந்திரங்கள் : 3 அடுக்கு பாதுகாப்பு, 24 மணி நேரம் கண்காணிப்பு!

வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பொட்டிகள் பலத்த பாதுகாப்புடன் மையங்களில் கொண்டு வைக்கப்பட்டுள்ளன.

Kannan

தமிழகத்தில் வாக்குப்பதிவு

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மிக அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், அதிக வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்கள்

தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகள், பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, 62 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

மூன்று அடுக்கு பாதுகாப்பு

இந்த மையங்களில் நான்கு அடுக்குகளாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் உள்ளூர் காவல்துறை, இரண்டாம் அடுக்கில் ஆயுதப்படை போலீசார், மூன்றாம் அடுக்கில் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் நான்காம் அடுக்கில் கண்காணிப்பு மற்றும் நுழைவு கட்டுப்பாட்டு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு

எந்த அனுமதியும் இல்லாமல் யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் கடுமையான சோதனைகள் நடைமுறையில் உள்ளன.ஒவ்வொரு சுழற்சி முறையிலும் சுமார் 500 பாதுகாப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 24 மணி நேரமும் இடையறாத கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு

அதிகாரிகள், தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மையங்களின் அனைத்துப் பகுதிகளிலும் உயர்தர கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் கிடைக்கும் பதிவுகளை மினி கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து 24 மணி நேரமும் நேரடியாக கண்காணிக்கப்படுகின்றன.

மே 4ல் வாக்கு எண்ணிக்கை

62 மையங்களிலும் மே 4ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, காலை 12 மணிக்குள் முன்னணி நிலவரம், மாலைக்குள் யார் ஆட்சி அமைப்பது என்று தெரிய வரும்.

====================