Engineering Admissions 2026: Application Deadline Extended Until June 5! source: google
தமிழ்நாடு

பொறியியல் சேர்க்கை 2026: விண்ணப்பிக்க ஜூன் 5 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

மாணவர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Kavitha prasanna

Engineering Admissions 2026: Application Deadline Extended Until June 5!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இணையவழியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்

மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இந்த சேர்க்கை செயல்முறையை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இணையவழியில் நடத்தி வருகிறது.

மாணவர்களிடையே பலத்த வரவேற்பு

கடந்த மே 3-ஆம் தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியதிலிருந்தே மாணவர்கள் மத்தியில் மிக பலத்த வரவேற்பு காணப்படுகிறது.

தற்போதைய நிலவரம் என்ன?

இதுவரை கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 2.81 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

விண்ணப்ப கட்டணம் செலுத்திவர்கள் விவரம்

இவர்களில் 2.17 லட்சம் பேர் தங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.

சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்கள் விவரம்

மேலும், 1.84 லட்சம் மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் இதர சான்றிதழ்களை இணையதளத்தில் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்துள்ளனர்.

மாணவர்களுக்கான உதவி மையங்கள்

விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விண்ணப்பப் பதிவின் போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும், வழிகாட்டுதல்களைப் பெறவும் மாநிலம் முழுவதும் பிரத்யேக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்காக கூடுதல் அவகாசம்

எனவே, தகுதியுள்ள மற்றும் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த கூடுதல் அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஜூன் 5-ஆம் தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பித்து நடப்பு ஆண்டின் பொறியியல் சேர்க்கையில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

======