Engineering counselling Round 2 concludes: 55.27% of seats vacant! source: google
தமிழ்நாடு

பொறியியல் கலந்தாய்வு 2ம் சுற்று நிறைவு : 55.27% இடங்கள் காலி!

111 கல்லூரிகளில் 50%-க்கும் அதிகமாகவும், 7 கல்லூரிகளில் 100% சேர்க்கையும் முடிந்துள்ளது.

Kavitha prasanna

Admissions have crossed the 50% mark in 111 colleges, while 7 colleges have achieved 100% admissions.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் 55.27 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.

பொறியியல் கலந்தாய்வு நிலவரம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 418 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,98,825 இடங்களில், சிறப்புப் பிரிவு, முதல் மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவில் 88,930 இடங்கள் (44.73%) நிரம்பியுள்ளன. இன்னும் 1,09,895 இடங்கள் (55.27%) காலியாக உள்ளன.

சுற்றுகள் வாரியாக சேர்க்கை விவரம்

சிறப்புப் பிரிவில் 950 இடங்களும், முதல் சுற்றில் 28,029 இடங்களும் ஒதுக்கப்பட்டன. நேற்று நிறைவடைந்த இரண்டாம் சுற்றில் பொதுப்பிரிவில் 49,984 மாணவர்கள் மற்றும் 7.5% உள்ஒதுக்கீட்டில் 9,967 மாணவர்கள் என மொத்தம் 59,951 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

23 கல்லூரிகளில் பூஜ்ஜிய சேர்க்கை

இரண்டாம் சுற்று முடிவில் 23 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 167 கல்லூரிகளில் 10%-க்கும் குறைவாகவே சேர்க்கை நடந்துள்ளது. அதேவேளையில் 111 கல்லூரிகளில் 50%-க்கும் அதிகமாகவும், 7 கல்லூரிகளில் 100% சேர்க்கையும் முடிந்துள்ளது.

சில பாடப்பிரிவுகளில் மாணவர்கள் ஆர்வம் இன்மை

தகவல் காட்சிப்படுத்துதல் மற்றும் தகவல் அறிவியல், சுற்றுச்சூழல் பொறியியல், ஜெனரேட்டிவ் ஏ.ஐ., மெஷின் லேர்னிங், தொழில்துறை பொறியியல் மற்றும் மேலாண்மை, கடல்சார் பொறியியல், ஜவுளி வேதியியல் ஆகிய பட்டப்படிப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.

பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள் 99% நிரம்பின

அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளான சி.இ.ஜி., ஏ.சி.டி., மற்றும் எம்.ஐ.டி. கல்லூரிகளுக்கு மாணவர்கள் முன்னுரிமை அளித்துள்ளனர்.

7.5% உள்ஒதுக்கீட்டில் இந்த 3 கல்லூரிகளிலும் அனைத்து இடங்களும் நிரம்பியுள்ள நிலையில், வளாகக் கல்லூரிகளில் மொத்தம் 99% இடங்கள் நிரம்பியுள்ளன.

இதையும் படிங்க : ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு? : விவசாயிகள் மகிழ்ச்சி, பயனாளர்கள் கலக்கம்!

======