பொறியியல் தரவரிசை வெளியிடு
தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று வெளியாகி உள்ளது
தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார்.
13ல் கவுன்சிலிங் தொடக்கம்
தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார்.
சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கான் கலந்தாய்வு
அதாவது, ஜூலை 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.
இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ,,அதாவது கவுன்சிலிங் வரும் 13 தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் என்றும்
மாணவர்கள், www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தரவரிசைப் பட்டியலை அறிந்துகொள்ளலாம் என்று உயர் கல்வி துறை அற்வித்துள்ளது
53 மாணவர்கள் 200/200 க்கு கட் ஆப் உயர்கல்வி துறை
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 3.02 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், சுமார் 2.5 லட்சம் பேர் பதிவுக் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும்
தரவரிசை வெளியிடப்பட்டதில் 1,30,767 பேர் மாணவர்கள், 1,05,246 பேர் மாணவிகள் என மொத்தம் 2,36,017 பேருக்கு தரவரிசை வெளியாகியிருக்கியிருப்பதாகவும்
மேலும் தரவரிசைப் பட்டியலில் 53 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
குறைத்தீர்ப்பு கால அவகாசம்
வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு கால அவகாசம் ஜூலை 1 முதல் ஜூலை 5- ஆம் தேதி வரையிலும்
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை அணுகி, இது குறித்து தீர்வு காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
========================