English books, procured dubious publishing entity under the name 'Vintage', present within Periyar Arivulagam source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

”300 பக்கம் விலை ரூ.9,900” : விண்டேஜ் பெயரில் போலி பதிப்பகம் : பெரியார் அறிவுலகில் ஆங்கில நூல்கள்..!

விண்டேஜ் என்ற பெயரில் போலி பதிப்பகம் மூலம் வாங்கப்பட்ட ஆங்கில நூல்கள், பெரியார் அறிவுலகில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

Kannan

பெரியார் அறிவுலகம்

கோவையில் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகில், போலி பதக்கங்கள் பெயரில் நூல்கள் இடம்பெற்று இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

போலி பதிப்பங்கள் - போலி நூல்கள்

அகல்விளக்கு, பீனிக்ஸ் என்ற போலி பதிப்பங்கள் பெயர்களில், போலியான நூல்கள் எழுதப்பட்டு இங்கு வந்திருக்கின்றன.

போலி எழுத்தாளர்கள் பெயரில் ஏஐ பயன்படுத்தி எழுதப்பட்டு வாங்கப்பட்ட 2 ஆயிரம் நூல்கள் பெரியார் அறிவுலகில் இருந்து அகற்றப்பட்டு இருக்கின்றன.

தீவிரம் பெறும் விசாரணை

இது தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டிருக்கும் தவெக அரசு, போலி நூல்களையும் அகற்றி இருக்கிறது. கோவை பெரியார் அறிவுலகம் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய நூலகங்கள், மாவட்ட நூலகங்களில் ஆய்வு நடத்தப்படுகிறது.

இந்தநிலையில், பெரியார் அறிவுகலத்தில் மற்றொரு போலி பதிப்பகம் பெயரில் நூல்கள் இடம்பெற்று இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

போலி பெயரில் ஆங்கில நூல்கள்

பிரபல பதிப்பகமான விண்டெஜ் பெயரில் போலியான பதிப்பகம் ஒன்று ஆங்கில நூல்களை அச்சடித்து இருக்கிறது.

இந்த பதிப்பகத்தில் இருந்து 257 நூல்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன. 2025 - 26ம் ஆண்டுகளில் இவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச தரப்புத்தக எண்களும் போலியானது என்று தெரிய வந்துள்ளது.

ஏஐ தகவல்கள் மூலம் நூல்கள்

300 பக்கங்களை கொண்டு ஒரு புத்தகம் ரூ.9,900 வரை வாங்கப்பட்டு இருக்கிறது. நூல்களில் இடம்பெற்று இருக்கும் தகவல்கள் 70 சதவீதம் ஏஐ-யுடன் பொருந்துவதாக உள்ளன.

அகல்விளக்கு, பீனிக்ஸ் போல விண்டேஜ் என்ற பெயரில் போலி பதிப்பகம், லண்டனில் முகவரி குறிப்பிட்ட இடத்தில் ஒரு கட்டிடம் கூட இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

நூலகங்களுக்கான நூல் கொள்முதல் நடைபெற்று இருக்கும் ஊழல்கள் அடுத்தடுத்து வெளி வந்தவண்ணம் உள்ளன. எனவே, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, தவறி இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

===========