வாரிய கூட்டத்தில் முடிவு
EPFO Withdrawal Rules 2025 in Tamil : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரிய கூட்டம் நடைபெற்றது. மத்திய தொழிலாளர்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா(Mansukh L. Mandaviya) தலைமை தாங்கினார். அதில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், வைப்புநிதியில் பகுதி அளவுக்கு பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த முடிவு(EPFO New Rules 2025) செய்யப்பட்டது. அத்தியாவசிய தேவைகள் (உடல்நலக்குறைவு, கல்வி, திருமணம்), வீட்டு தேவைகள், சிறப்பு சூழ்நிலை என 3 பிரிவாக விதிமுறைகள் வகைப்படுத்தப்பட்டன. தொழிலாளர் பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு உள்பட வைப்புநிதியில் தகுதியான இருப்பில் 100 சதவிகிதம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்.
பண உச்சவரம்பு அதிகரிப்பு
பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கல்விக்கு 10 மடங்கும், திருமணத்துக்கு 5 மடங்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றம், நிறுவனம் மூடல், தொடர்ச்சியாக வேலையின்மை, தொற்றுநோய் பரவல் ஆகிய சிறப்பு சூழ்நிலைகளுக்கு காரணம் தெரிவிக்காமல் பணம் எடுக்கலாம். அதே சமயத்தில், உறுப்பினர்களின் எதிர்கால தேவைக்காக உறுப்பினர் கணக்கில் 25 சதவீத பங்களிப்பை குறைந்தபட்ச இருப்பாக எப்போதும் பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : வருங்கால வைப்பு நிதியில் இருந்து இனி ரூ.5 லட்சம் எடுக்கலாம்
தொழிலாளர்கள் உற்சாகம்
தொடர்ந்து இதுபோன்ற மாற்றங்கள் இனி இ.பி.எப்.ஓ(EPFO) வழியாக தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் இனி காரணம் இன்றி 100 சதவிகிதம் பணம்(EPF Withdrawal Rules 2025 Tamil) எடுக்கலாம் என்ற முடிவு அமல்படுத்த பட்டுள்ள நிலையில், மேலும் தொழிலாளர்களுக்கு இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்தால், அவர்கள் நிச்சயம் பயனடைவார்கள் என்று தொழிலாளர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது.