EPS on Ajith Kumar Death : சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார். ஒருவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றால், முறையாக எப்ஐஆர் பதிவு செய்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஜித்குமார் மரணம் கொலைதான் :
ஆனால் இந்த வழக்கில், அதேபோல் எதுவும் பின்பற்றப்படவில்லை. காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியதால்தான் அவருடைய உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே இதை ஒரு கொலையாகத்தான் பார்க்க வேண்டியது உள்ளது. இது மிக மிக வருத்தத்துக்குரியது. வேதனைக்குரியது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு இதுவரையில் 25 காவல் நிலைய விசாரணை மரணங்கள் ஏற்பட்டுள்ளன. சட்டம் -ஒழுங்கு பாதுகாப்பில், தமிழக அரசு மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. அதுவும் காவல் நிலைய மரணம் என்பது மிக மிக வேதனைக்குரியது.
இது கண்டனத்துக்குரியது. வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், விசாரணையில் முழு உண்மையும் வெளிவரும்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
====