EPS Slams tvk Government source:thamizhalai,google
தமிழ்நாடு

“முன்பெல்லாம் லஞ்சம் வாங்குவார்கள், இப்போது டிமாண்ட் செய்கிறார்கள்”: தவெக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக அரசு நிர்வாகம், ஊழல், மின்வெட்டு மற்றும் முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

Kavitha prasanna

EPS Slams tvk Government: Edappadi Palaniswami Raises Serious Allegations

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தற்போதைய அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள், மின் பற்றாக்குறை, கடன் சுமை மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி எழுப்பிய குற்றச்சாட்டுகள்

ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் கூறப்படும் நிலைக்கு மாறாக, அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்?

முன்பெல்லாம் கொடுத்த லஞ்சத்தை வாங்கிக் கொண்ட நிலை மாறி, தற்போது இவ்வளவு வேண்டும் என டிமாண்ட் செய்து லஞ்சம் வாங்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும், அரசு அலுவலக சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதே இதற்கு சான்று என்றும் குறிப்பிட்டடார்.

மின்சாரப் பற்றாக்குறை

தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தில் மின்வெட்டு இல்லை என அமைச்சர்கள் கூறினாலும், ஆளுங்கட்சி கூட்டணித் தலைவர்கள் பேசும் கூட்டங்களிலும், அமைச்சர்கள் பேட்டியளிக்கும் இடங்களிலேயே மின்வெட்டு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

மேலும், மின் பற்றாக்குறை இல்லை என்றால் வெளிச்சந்தையில் 2000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் வாங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

புதிய தலைமைச் செயலகம் மற்றும் கடன் சுமை

மாநிலம் கடும் கடன் சுமைகளில் இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் அமைப்பது அவசியம்தானா என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, மீனவர்கள் அதிகம் வாழும் பகுதிகள், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் உள்ள இடங்களில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

முதலமைச்சரின் லண்டன் பயணம்

முதலமைச்சரின் லண்டன் பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணமா அல்லது இன்பச் சுற்றுலாவா என கேள்வி எழுப்பிய அவர், லண்டன் செல்லும்போது தொழில்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை உடன் அழைத்துச் செல்லாதது ஏன் என்றும், தமிழகத்தில் இயங்கும் நிறுவனங்களுடனே லண்டனில் சென்று ஒப்பந்தம் செய்வதன் காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

இடைத்தேர்தல் மற்றும் அரசியல் நகர்வுகள்

மேலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் குறித்துப் பேசிய அவர், இது மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு தேர்தல் எனக் குறிப்பிட்டார்.இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக விரைவில் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

=====