EPS Warn Tamil Nadu Goverment  https://x.com/EPSTamilNadu
தமிழ்நாடு

மக்களை மிரட்டுவதை கைவிடுங்க : திமுக அரசுக்கு எடப்பாடி எச்சரிக்கை

'மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது , சட்டத்தை மீறி செயல்படுவதை என எல்லாவற்றையும் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் அரசை எச்சரிப்பதாக, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Kannan

காவல் அதிகாரி மிரட்டுவதா? :

EPS Warns TN Govt: இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், ” விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து 'ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்' என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை, போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் தெரிகிறது.

வரலாற்று பாசிசம் தோற்றுவிடும் :

ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மை, மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவதுதான். சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : கொடுங்கோல் காட்சிகளே ”திராவிட மாடல் ஆட்சி” : ஓபிஎஸ் காட்டம்

====