Exclusive app for Perambur constituency residents: CM Vijay to launch it; coming soon for public use.  google
தமிழ்நாடு

பெரம்பூர் தொகுதி மக்களுக்கு பிரத்யேக செயலி : முதல்வர் விஜய் அறிமுகம் செய்கிறார் : விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது...

முதல்வர் விஜய் போட்டியிட்டு வென்ற பெரம்பூர் தொகுதி மக்களுக்கென்று பிரத்யெக டிஜிட்டல் செயலியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Rohini

பெரம்பூர் தொகுதி மக்களுக்கு பிரத்யேக செயலி

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் , பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ,இந்த நிலையில் பெரம்பூர் தொகுதி மக்களுகென்று பிரத்யேக செயலி உருவாக்கப்படுவதாக முதல்வர் விஜய் தெரிவித்திருக்கிறார்

பெரம்பூர் மக்களின் தேவைகளை நிறைவு செய்யவே இந்த செயலி

பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளையும் ,புகார் மற்றும் குறைகளை தெரிவிப்பதற்காகவெ இந்த புதிய செயலியை அறிமுகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்

பெரம்பூர் மக்களுக்கென்று அறிமுகப்படுத்தப்ப்ட்டுள்ள இந்த மொபைல் செயலியானது , முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுதெரிவிக்கப்பட்டுள்ளது

புகார் வந்த 72 மணி நேரத்தில் நடவடிக்கை

அதனப்டி பதிவு செய்யும் புகார்கள் மீது அடுத்த மூன்று நாட்களுக்குள் அதாவது 72 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் முயற்சி தொகுதி மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அந்த தொகுதியில் இருந்து வரும் புகார்கள் அனைத்தும் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பபடும்

விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது

இந்த புதிய நவீன செயலி மற்றும் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முதல்வர் விஜய்யின் அலுவலகம் ஆகிய இரண்டையும் வரும் வாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் முறைப்படி திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

செயலின் பயன்பாடு மற்றும் முக்கியத்துவம்

இந்த செயலின் பயன்பாடு குறித்த்து தவெக தெரிவித்துள்ளதுபடி

வ்வொருவருக்கும் ஒரு தேவை உண்டு; ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கதை உண்டு" என்ற வாசகத்துடன், பெரம்பூர் தொகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்து தீர்ப்பதற்கான ஒரு மக்கள் சேவைத் தளமாக இந்த செயலி உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது

எவ்வாறு புகார்களை தெரிவிப்பது

இச்செயலியின் மூலம் கல்வி, மருத்துவ உதவிகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் மட்டுமின்றி, தெருவிளக்கு எரியாதது, பழுதடைந்த சாலைகள், குப்பைகள் போன்ற அன்றாடப் பொதுப் பிரச்சினைகளையும் பொதுமக்கள் எளிதாகப் பதிவு செய்ய முடியும். பொதுமக்கள் தங்கள் விவரங்களை நிரப்பி, தங்களது வார்டை தேர்வு செய்து, பிரச்சினைகளைக் குறிப்பிடலாம்;

அல்லது தட்டச்சு செய்ய இயலாதவர்கள், வாய்ஸ் மெசேஜ் மூலமாகவும் தங்களது புகார்களைப் பதிவு செய்யும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதி: ராஜினாமா செய்த முதல்வர்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் , முதல்வர் விஜய் திருச்சி கிழக்கும் மற்றும் பெரம்பூர் அகிய இரு தொகுதிகதொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் . இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்தார் , குறிப்பாக பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை எதிர்த்துப் போட்டியிட்டு 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது .

======================

பெரம்பூர் தொகுதி மக்களுக்கென்று பிரதேயக செயலி , முதல்வர் விஜய அறிமுகம் செய்கிறார் , விரைவில் மக்கள் பயன்பாடிற்கு வருகிறது