சூப்பர் எல் நினோ பாதிப்பு
சூப்பர் எல் நினோவின் தாக்கத்தால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. வடக்கே சில மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்தாலும், கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் மழை அளவு குறைந்து விட்டது.
7 பேர் குழுவை அமைத்த அரசு
தமிழகத்தை பொருத்தவரை இயல்பை விட 15 சதவீதம் குறைவாக பெய்திருக்கிறது. எல் நினோ பாதிப்பை ஆராய்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பாலாஜி நரசிம்மன் தலைமையில் 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
நிபுணர் குழு பரிந்துரை
இந்த குழு, குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்ட காலம் என 3 செயலாக்க காலங்களில் பல்வேறு துறைகளின் கீழ் சில பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது.
நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும்
அதன்படி, வடகிழக்கு பருவமழைக்கு முன்பான குறுகிய காலத்தில், முக்கிய நீர் நிலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு
பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வானிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் நேரம் மாற்றம்
கடும் வெப்பம் நிலவும் நாட்களில் பள்ளி நேரத்தை மாற்றுவது, வெளிப்புற விளையாட்டுகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருவகால நோய்கள்
டெங்கு, மலேரியா, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களை கண்காணித்து அத்தியாவசிய மருந்தைகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
2027 ஆம் ஆண்டு கோடை காலத்தை கருத்தில் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்தக் கூடிய பயிர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை, வறட்சி
2026 வடகிழக்கு பருவமழையின் போது சில பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கனமழையும், ஒரு சில பகுதிகளில் மழை குறைந்த வறட்சி ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர் குழு எச்சரித்துள்ளது.
இயல்பான அளவு வடகிழக்கு பருவமழை
நிபுணர் குழு அறிக்கையை பார்க்கையில், வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பாகவே இருக்கும். சில இடங்களில் அதீத மழைப்பொழிவுக்கும் வாய்ப்புகள் இருப்பது தெரிகிறது.
மூன்று அதிதீவிர புயல்கள் உருவாகும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு இருப்பதால், அவற்றின் காரணமாக, அதிக அளவு மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது.
=================