Father-son issue may be resolved tomorrow. Madras High Court opinion on PMK Symbol Flag case Update in Tamil google
தமிழ்நாடு

தந்தை - மகன் பிரச்னை நாளை சரியாகலாம் : பாமக வழக்கு, உயர் நீதிமன்றம் கருத்து

Madras High Court on Ramadoss Anbumani Clash : பாமக-வின் பெயர், சின்னம் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும், பாமக தலைவர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Rohini

ராமதாஸ் தொடர்ந்த வழக்கு

Madras High Court on Ramadoss Anbumani Clash : பாமக-வின் பெயர் மற்றும் சின்னம் போன்றவற்றை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும் பாமக தலைவர் எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்த கடிதம் தொடர்பாக உத்தரவை ரத்து செய்து தன்னை பாமக தலைவராக அறிவிக்க வேண்டும்

எனக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அன்புமணி தரப்பில் மனுத் தாக்கல்

இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என அன்புமணி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் பாமக கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தன்னையும் வழக்கில் இணைக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தா

விசாரணையின் தீர்ப்பை மாற்று தேதிக்கு அறிவித்த நீதிபதி

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , உரிமையியல் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு மாற்றி ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

நீதிபதி கருத்து

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, தேர்தல் தேதி அறிவிப்பான் வெளியிடப்பட்டுள்ளது தற்போது என்ன செய்யபோகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் மேலும் . தந்தை - மகன் பிரச்சினை நாளை சரியாகலாம்.

ஆனால் கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்என்று கருத்து தெரிவித்துள்ளனர்.