Filing of nominations for Rajya Sabha by-elections begins; TVK poised to make its debut in Parliament! source:google
தமிழ்நாடு

மாநிலங்களவை இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்; நாடாளுமன்றத்தில் தவெக கால்பதிக்க வாய்ப்பு!

மாநிலங்களவை தேர்தல் 2026: மாநிலங்களவை விதிகளின்படி, சட்டமன்றத்தில் அதிக எம்.எல்.ஏ-க்களின் பலம் கொண்ட ஆளும்கட்சியின் வேட்பாளரே எளிதில் வெற்றி பெற முடியும்.

Kavitha prasanna

Filing of nominations for Rajya Sabha by-elections begins; TVK poised to make its debut in Parliament!

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கடந்த மே 7-ஆம் தேதி ராஜிநாமா செய்தார்.

மாநிலங்களவை காலியிடம்

இதனால் ஏற்பட்ட மாநிலங்களவை காலி இடத்திற்கு வரும் ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மே 22 அன்று அறிவித்திருந்தது.

வேட்புமனு தாக்கல் தொடக்கம்

அதன்படி, இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 1-ஆம் தேதி (திங்கள்கிழமை) முறைப்படி தொடங்கியது. முதல் நாளான நேற்று, தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் என்பவர் தனது 255-ஆவது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் கால அட்டவணை

இத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய ஜூன் 8 கடைசி நாளாகும். ஜூன் 9 அன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூன் 11-க்குள் மனுக்களைத் திரும்பப் பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 18-ல் வாக்குப்பதிவு?

ஒருவேளை போட்டி நிலவினால், ஜூன் 18 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

தவெக-வின் வரலாற்றுத் தொடக்கம்

மாநிலங்களவை விதிகளின்படி, சட்டமன்றத்தில் அதிக எம்.எல்.ஏ-க்களின் பலம் கொண்ட ஆளும்கட்சியின் வேட்பாளரே எளிதில் வெற்றி பெற முடியும்.

தவெகவிற்கு அதிக வாய்ப்பு

தற்போதைய சூழலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதால், அக்கட்சியின் வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

நாடாளுமன்றத்தில் கால் பதிக்குமா தவெக?

இதன் மூலம், தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் கால்பதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

======