Filing of nominations for the assembly elections in Tamil Nadu begins on the 30th. Voting will take place on April 23rd google
தமிழ்நாடு

தமிழக சட்டமன்ற தேர்தல் : மார்ச் 30 வேட்புமனு தாக்கல் தொடக்கம் : ஏப்ரல் 23ல் வாக்குப்பதிவு : மே 4 வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 30 தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Kannan

தமிழக சட்டமன்ற தேர்தல்

Tamil Nadu Assembly Election 2026 : பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 5 மாநில சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஐந்து மாநில தேர்தல் நிலவரம்

5 மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்காளர் திருத்த பட்டியலுக்கு பிறகு இந்த தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகள் உள்ளன.

2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 25 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

ஒரே கட்டமாக தேர்தல்

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. lஅரசிதழில் வரும் 30ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்.

தேர்தல் அட்டவணை

வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீது ஏப்ரல் 7ம் தேதி பரிசீலனை நடைபெற்று, தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 9 ஆகும்.

வாக்குப்பதிவு ஏப்ரல் 23

ஏப்ரல் 21ம் தேதி மாலை 5 மணியோடு பிரசாரம் ஓயும். ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 5 மாநிலங்களிலும் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, மே 4ம் தேதி ஒரே சமயத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.

அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வெளியாகும். 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும், மே 6ம் தேதியோடு நிறைவுபெறும். தன்)

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு :

* வேட்புமனு தாக்கல் தொடக்கம் 30.03.2026 (திங்கள்)

* வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கள்)

* வேட்புமனுக்கள் பரிசீலனை 07.04.2026 (செவ்வாய்)

* வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் 09.04.2026 (வியாழன்)

* வாக்குப்பதிவு நடைபெறும் தேதி (Poll Date) 23.04.2026 (வியாழன்)

* வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி 04.05.2026 (திங்கள்)

* தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் தேதி 06.05.2026 (புதன்)

==============