Firearms issued 'Singapenn' special force, and surveillance conducted using 49 drones: IG Bhavaneeswari.  google
தமிழ்நாடு

”சிங்கப்பெண் சிறப்பு படைக்கு துப்பாக்கி” : 49 ட்ரோன்​கள் மூலமாக காண்காணிப்பு மேற்கொள்ளப்படும் : ஐ.ஜி. பவானீஸ்வரி...!

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுக்காக்க முதல்வர் விஜய் அரசு சிங்கப்பெண்கள் சிறப்பு பாதுகாப்பு படையை தொடங்கியது.

Rohini

சிங்கப்பெண் சிறப்பு படை

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தால் பெண்கள் மற்றும் குழந்தகளின் பாதுக்காப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் படை உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் , தேர்தல் இறுதி முடிவுகளில் தவெக பெரும்பான்மையான இடங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றியது

நடைமுறைக்கு வந்த சிறப்பு படை

இந்த நிலையில் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் முதலவ்ர் விஜய் , இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை தொடங்கி வைத்தார் ,இதில் படைக்கான ரோந்து வாகனத்தை இயக்கி, தொடக்க விழாவை தொடங்கி வைத்தார்

தேவைப்பட்டால் துப்பாக்கி வழங்கப்படும்

இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையில் பணியாற்றும் காவலரக்ளுக்கு தேவைப்பட்டாக் துப்பாக்கி வழங்கப்படும் என்று இப்படையின் முதன்மை அதிகாரியான ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார் , மேலும் துப்பாகை இயக்கவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதகவும் , தெரிவித்துள்ளார்

இது குறித்து பேசிய ஐ.ஜி. பவானீஸ்வரி கூறியதாவது

இந்த சிறப்பு படை குறித்து பேசிய ஐ,ஜி கூறும்போது ,பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களை துரித​மாகக் கையாள்​வதும், ஆபத்து காலங்​களில் விரைந்து செயல்​பட்டு அவர்​களைப் பாது​காப்​பதையே இந்த படை முதன்மையான நோக்கமாக கொண்டுள்ளதாகவும்

இதற்​காக பொது இடங்​கள், பேருந்து நிலை​யம், அலு​வல​கம் உட்பட பல இடங்​களில் இந்த அதிரடிப்​படை போலீ​ஸார் ரோந்து செல்​வர். பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் எங்​கெல்​லாம் நடந்​துள்​ளது அல்​லது நடை​பெறலாம் என்ற விவரத்தை சேகரித்து அந்த இடங்​களில் மீண்​டும் குற்​றங்​கள் நிகழாத​வாறு நடவடிக்கை எடுக்க இந்த படை ட துரிதமாக செயல்படும் என்றும் தெரிவித்தார்

பெண்களுக்கு பாதுக்காப்பான நிலையை உருவாக்குவதே முதன்மை நோக்கம்

இந்த சிறப்பு அதிரடிப் படைக்​காக ரூ.357 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளதாகவும் ,புதி​தாக 2,545 போலீ​ஸார் நியமிக்​கப்பட உள்​ளார்​கள் பெண்​களுக்கு பாது​காப்​பான இடம் தமிழகம் என்ற நிலை உரு​வாக்​கப்பட வேண்டும் என்பதே இதன் முக்கியமான நோக்கமாகும்

சமூக வலைதள குற்றங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை

பெண்களுக்கு எதிராக நிகழ் நேரங்களில் மட்டுமல்லாது , சமூக வளைதளம் மூலமாக் ஏற்படும் குற்றங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்டும் என்று தெரிவித்துள்ளார்

ட்ரோன்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படும்

பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 49 ட்ரோன்​கள் வாங்​கப்பட உள்​ளதாகவும் . போலீ​ஸார் நேரில் சென்று கண்​காணிக்க முடி​யாத இடங்​களில் இவை பயன்​படுத்​தப்​படும்.

பொது இடங்​களில் பெண்​களுக்கு ஏற்​படும் அச்​சுறுத்​தல்​களைத் தவிர்த்​து, அவர்​கள் எந்த நேரத்​தி​லும் அச்​சமின்றி பயணிக்​க​வும், வாழ​வும் ஓர் உறு​தி​யான பாது​காப்பை ஏற்​படுத்​திக் கொடுப்​ப​தே இப்​படை​யின்​ நோக்​கம்​. என்று சிறப்புபடை செயல்பாடுகள் குறித்து தெரிவித்தார்

====================