தமிழகத்தில் தவெக அரசு
தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, பிற கட்சிகளுடன் ஆதரவு ஆட்சியில் அமர்ந்தது.
பட்ஜெட் கூட்டம் - நாளை தொடக்கம்
முதல்வராக விஜய் பொறுப்பேற்க தமிழக வரலாற்றில் முதன்முறையாக கூட்டணி அரசு ஆட்சி அமைத்தது. பிறகு இரண்டு முறை சட்டமன்றம் கூடிய நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டப்பேரவை நாளை கூடுகிறது.
தவெக அரசின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 23-ம் தேதி வரை நடத்தப்பட்டு, பின்பு தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
தவெக அரசின் முதல் பட்ஜெட்
முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றார்.
முதல்வர் தலைமையில் ஆலோசனை
இதையடுத்து, நடப்பு 2026-27-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டது. அதற்கேற்ப, பட்ஜெட் முன்தயாரிப்புப் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றன.
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள், தேர்தல் வாக்குறுதிகளில் உடனே நிறைவேற்ற வாய்ப்பு உள்ள அறிவிப்புகள் ஆகியவை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 2 முதல் 31-ம் தேதி வரை துறை வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
நிதி அமைச்சர் மரிய வில்சன்
இதையடுத்து, நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் நாளை ( ஆகஸ்டு 5 ) சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
6ம் தேதி வேளாண் பட்ஜெட்
வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் வினோத் நாளை மறுநாள் ( ஆகஸ்டு 6 ) தாக்கல் செய்ய உள்ளார்.
பெண்களுக்கு முக்கியத்துவம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை, பால் கொள்முதல் அதிகரிப்பு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, போன்ற அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
‘வெற்றித் தமிழகம்’ - தொலைநோக்கு திட்டம்
இதுதவிர, ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரிலான அரசின் ஐந்தாண்டு தொலைநோக்கு திட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி வட்டியில்லா கடனுதவி, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கை...
மாணவர்களுக்கு 20 லட்சம் கல்விக்கடன்
மாணவர்கள் உயர் கல்விக்கு பிணையின்றி ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன், புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
================