First phase training course polling station officials 16 assembly constituencies Starting from 28th Election Office Source : Google
தமிழ்நாடு

வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்​கான முதல்​கட்ட பயிற்சி வகுப்பு ; 28-ம் தேதி தொடக்கம் ;மாவட்டத் தேர்தல் அலுவலர் தகவல்!

TN Assembly Election 2026 Poll : வருகிற சட்டமன்ற தேர்தலில் பங்கெடுக்கும் வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்​கான முதல்​கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்படுவதாக தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் அறிவித்துள்ளார்.

Rohini

முதற்கட்ட பயிற்சி வகுப்பு

TN Assembly Election 2026 Polling Booth : சென்னை மாவட்​டத்​துக்குட்​பட்ட 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்​கான முதல்​கட்ட பயிற்சி வகுப்பு 28-ம் தேதி தொடங்கி நடைபெறும் என மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது

சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் 978 இடங்​களில் மொத்​தம் 4,079 வாக்​குச்​சாவடிகள் இருக்கின்றன .இந்த வாக்​குச்​சாவடி மையங்​களில் பணிபுரிய உள்ள 19,594 வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்​கான முதல்​கட்ட பயிற்சி வகுப்பு 16 மையங்​களில் மார்ச் 28-ம் தேதி காலை 9 மணிக்கு நடை​பெற இருப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம்

வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்​கான முதல்​கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்படும் பகுதிகளாக ,தேர்தல் ஆணையர் கூறிய செய்தி குறிப்பில் பெரம்​பூர் தொகு​திக்கு வியாசர்​பாடி​யில் உள்ள டாக்​டர் அம்​பேத்​கர் அரசு கலைக் கல்​லூரி​யிலும்,

கொளத்​தூர் தொகு​திக்கு பந்​தர் கார்​டன் சென்னை உயர்​நிலைப் பள்​ளி​யிலும், ராயபுரம் தொகு​திக்கு மேற்கு மாதா சர்ச் சாலை​யில் உள்ள புனித பீட்​டர் உயர்​நிலைப் பள்​ளி​யிலும் பயிற்சி வகுப்பு நடை​பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ,

தவறாமல் பங்கெடுக்க வேண்டும் ஆணையர் அறிவிப்பு

இந்த பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மீறினால் தேர்​தல் நடத்தை விதி​களின்​படி, நடவடிக்கை எடுக்​கப்​படும் என்றும் அவர் தெரி​வித்​தார்