திமுக ஆட்சி
தமிழகத்தில் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த நிலையில், 1967ம் ஆண்டு அண்ணாதுரை தலைமையிலான திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
அதிமுக ஆட்சி
இதன்பிறகு 10 ஆண்டுகள் திமுக ஆட்சி நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து பிரிந்து, அதிமுக என்ற கட்சியை தொடங்கினார் எம்ஜிஆர்.
1977ம் ஆண்டு தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெற, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் எம்ஜிஆர். திமுக எதிர்க்கட்சி வரிசையை அலங்கரித்தது.
மாறிமாறி ஆட்சி
அதன்பிறகு இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இதற்கு தவெக முற்றுபுள்ளி வைத்து இருக்கிறது.
திராவிட கட்சிகள் இல்லாத அரசு
அதாவது 59 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி தமிழகத்தில் அமைந்து இருக்கிறது.
எதிர்க்கட்சி வரிசையில் திமுக, அதிமுக
மேலும், அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பமாக, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி வரிசையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அதிமுக் தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதும் இதுவே முதல்முறை ஆகும்.
கவனம் ஈர்த்த சட்டமன்றம்
ஆளுங்கட்சி இருக்கைகளில் புதிய முகங்களும், நீண்டகாலம் ஆட்சி செய்த பாரம்பரியக் கட்சிகள் இரண்டும் எதிர்க்கட்சி வரிசையிலும் அமர்ந்திருப்பது தமிழக தேர்தல் வரலாற்றின் மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.
பராபவ ஆண்டு
தமிழ் ஆண்டுகள் வரிசையில் பராபவ வருடத்தில் தொடங்கிய திராவிட கட்சிகளின் ஆட்சி, 60 ஆண்டுகளுக்கு பிறகு பராபவ ஆண்டிலேயே முடிவுக்கு வந்து இருக்கிறது.
==============