history of Tamil Nadu, Prime Minister Narendra Modi will inaugurate the service of 6 trains in a single day today google
தமிழ்நாடு

ஒரே நாளில் புதிதாக ”6 ரயில் சேவைகள்” : துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி : தமிழக வரலாற்றில் புதிய சாதனை!

தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் 6 ரயில்களின் சேவையை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

Kannan

தமிழகத்தில் ’அம்ரித் பாரத்’ ரயில்கள்

First time in the history of Tamil Nadu, Prime Minister Narendra Modi will inaugurate the service of 6 trains in a single day today : தென் தமிழகத்தையும் கேரளா மற்றும் கர்நாடகாவையும் இணைக்கும் புதிய வழித்தடங்கள் மற்றும் நவீன வசதிகள் கொண்ட 'அம்ரித் பாரத்' ரயில்களின் அறிமுகம் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஒரே நாளில் 6 ரயில்கள் அறிமுகம்

இந்தநிலையில், ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார், தமிழக ரயில்வே வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஒரே நாளில் 6 புதிய ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

காணொலி காட்சி வாயிலாக 6 ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் தமிழக மக்களுக்கு கூடுதலாக ரயில் சேவை கிடைக்கும்.

திருநெல்வேலி – மங்களூர் விரைவு ரயில்

அதன்படி, திருநெல்வேலி – மங்களூர் விரைவு ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த ரயில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு வழியாக பயணிக்கும்.

அம்ரித் பாரத் ரயில்கள்

இதே போல், ராமேஸ்வரத்தில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில், நாகர்கோவில் – சாரளப்பள்ளி 'அம்ரித் பாரத்' ரயில், போத்தனூர் – தன்பாத் 'அம்ரித் பாரத்' விரைவு ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

மயிலாடுதுறை – காரைக்குடி பயணிகள் ரயில்

பொள்ளாச்சி – பாலக்காடு இடையே மின்சார பயணிகள் ரயில், மயிலாடுதுறை – காரைக்குடி பயணிகள் ரயிலின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

தென் தமிழகம் - கர்நாடகா

குறிப்பாக, தென் தமிழகத்தையும் கேரளா மற்றும் கர்நாடகாவையும் இணைக்கும் புதிய வழித்தடங்கள் மற்றும் நவீன வசதிகள் கொண்ட 'அம்ரித் பாரத்' ரயில்களின் அறிமுகம் செய்யப்படுவது பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

===========