Five years of DMK Government rule: BJP Former Leader Annamalai question to Chief Minister on Crime in Tamil Nadu google
தமிழ்நாடு

8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள் : திமுக ஆட்சியின் அவல நிலை : முதல்வருக்கு அண்ணாமலை காட்டமான கேள்வி

Annamalai Tweet Today : தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றங்களை கண்டு கொள்ளாமல் முதல்வர் ரீல்ஸ் பதிவிட்டு கொண்டு இருக்கிறார் என்று அண்ணாமலை முதல்வருக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்

Rohini

அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கும் அண்ணாமலை

Annamalai Tweet Today : திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து ஆண்டுகளில், 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.

விளாத்திகுளம் சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதற்குக் காரணமான குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை.

ஆனால், இது எது குறித்தும் கவலை இல்லாமல், ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

விளம்பர நாடக அறிவுரை எல்லாம் தேவையற்றது -அண்ணாமலை

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள், கட்டிடங்கள் இல்லாமல், குடிநீர் வசதி இல்லாமல், கழிவறை வசதி இல்லாமல் இருக்கின்றன.

பல்லி விழுந்த உணவு உண்டு, 43 பள்ளிக் குழந்தைகள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

குழந்தைகளுக்கு தரமற்ற காலை உணவும், அழுகிய முட்டையுடன் மதிய உணவும் கொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

இவற்றை எல்லாம் சரி செய்வதை விட்டுவிட்டு, கல்வி நேரம் போக, தங்கள் கடின உழைப்பினால், இன்று தமிழகம் முழுவதும் தெரிந்த முகமாகியிருக்கும் இரண்டு சிறுவர்களையும், உங்கள் விளம்பர வெறிக்குப் பயன்படுத்துகிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சர் அவர்களே என்று கேள்வி எழுப்பியுள்ளார்

மாணவர்களுக்குக் கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகளை முதலில் ஏற்படுத்திக் கொடுங்கள். பள்ளிகள் வரை வந்துவிட்ட கஞ்சா உட்பட போதைப் பொருள் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துங்கள். உங்கள் விளம்பர நாடக அறிவுரை இல்லாமலேயே அவர்கள் படிப்பார்கள். என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.