தள்ளுவண்டி கடை வியாபரம்
FSSAI Certificate License Compulsory in Tamil Nadu : பொதுவாக தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும், மாவட்டத்திலும் வியாபார நோக்கில் கடைகள் அதிகம். அதிலும் உணவு வியாபரம் என்றால் அதற்கு சுவை மற்றும் உணவு ரீதியாக பெருவாரியானோர் இதில் முதலீட்டாளர்களாக திகழ்கின்றனர்.
இந்நிலையில், உணவு கடைகளில் மட்டுமல்லாது, தள்ளுவண்டி என்றால் அதற்கு ஒரு ருசிகர கூட்டமே இருக்கிறது. அப்படி இருக்கையில், தள்ளுவண்டிகாரர்களுக்கு இது முக்கியம் என்றவாறு ஒரு புதிய விதிமுறையை உணவு பாதுகாப்புத்துறை அமல்படுத்தி, கட்டாயப்படுத்தியுள்ளது.
FSSAI சான்றிதழ்
உணவு கடைகளாக இருக்கும் ஒவ்வொரு ரெஸ்டாரன்ட், உணவு விடுதி என அனைத்திற்கு உணவு தர சான்றிதழ்(FSSAI Certificate in Tamil) பெற்றிருக்கு வேண்டும் என்ற ஒரு விதிமுறை தமிழகத்தில நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இதை மீறும் உணவு விடுதிகள் மற்றும் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கடை சீல்வைப்பு மற்றும் அபாராதம் விதித்து வந்தனர். இது இப்போது இவர்களுக்கும் உண்வு என்றவாறு, உணவு வியாபாரம் தள்ளுவண்டியில் செய்வோர் அதிக பொருளாதார வசதி இல்லாததால் சாலை வீதிகளில் தள்ளுவண்டி இட்டு உணவு வியாபரம் செய்து வருகின்றனர்.
ஆனால், உணவு பாதுகாப்புத்துறை(Food Safety Department), இனி இவர்களும் கட்டாயம் FSSAI சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது.
விதிகளை மீறும் கடைகள் மீது நடவடிக்கை
பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் முறையாக உரிமம் பெற உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ள நிலையில், FSSAI சான்றிதழ் பெறாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு வேண்டுகோள்
மேலும். ஆன்லைன், இ-சேவை மையங்களில் இலவசமாக உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தள்ளுவண்டிக் கடை விற்பனையாளர்கள் உரிமம் பெற்றுள்ளார்களா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
எனவே, தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள், விரைந்து FSSAI சான்றிதழை வாங்கி தங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.
===