Former ADMK Minister Semmalai Joins TVK  source:google,thamizhalai
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார்: தவெக கட்சித் துண்டு அணிவித்து வரவேற்ற முதல்வர் விஜய்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தாராபுரத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடிப்பு.

Kavitha prasanna

Former ADMK Minister Semmalai Joins TVK in Presence of Chief Minister Vijay

அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செம்மலை, தாராபுரத்தில் நடைபெறும் தவெகவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத் திடலில் முதல்வர் விஜய் முன்னிலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துகொண்டார்.

இடைத்தேர்தல் பின்னணி

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இவ்விரு தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில் அவர்கள் இருவரும் தவெக வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தாராபுரம் பிரச்சாரக் களத்தில் வரவேற்பு

மதுராந்தகத்தைத் தொடர்ந்து இன்று தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்த முதல்வர் விஜய்யை, தவெக கட்சித் துண்டுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை வரவேற்றார்.

செம்மலை கொண்டு வந்த கட்சித் துண்டை வாங்கி, அவரது கழுத்தில் அணிவித்து அவரை தவெகவில் முறைப்படி சேர்த்துக் கொண்டார் முதல்வர் விஜய்.

அதிமுக தலைமை மீது அதிருப்தி

கடந்த சில நாட்களாகவே அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த செம்மலை தவெகவில் இணையப் போவதாகக் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்கு வருகை தந்து தவெக முக்கிய நிர்வாகிகளுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர், முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க : "இண்டியா கூட்டணி சிதைந்துவிட்டது" ராகுல் தலைமையை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்!

=======