From Prime Minister Modi and Rahul to Pawan Kalyan—Leaders Extend Greetings to TVK Chief Vijay! source: google
தமிழ்நாடு

பிரதமர் மோடி, ராகுல் முதல் பவன் கல்யாண் வரை... தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து...!

தவெக கட்சியின் சிறப்பான செயல்பாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Kavitha prasanna

தவெக தலைவர் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் படைத்து வரும் வரலாற்றுச் சாதனைக்காகப் பல்வேறு அரசியல் தலைவர்கள் அக்கட்சியின் தலைவர் விஜய்க்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்த விஜய்

இத்தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல முதல் தேர்தலிலேயே 34.92% சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, 1977-ல் எம்.ஜி.ஆர் படைத்த சாதனையை முறியடித்துள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து

தவெக கட்சியின் சிறப்பான செயல்பாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் வளர்ச்சிக்கான அனைத்துப் பணிகளையும் பாஜக அரசு மேற்கொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வாழ்த்து

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, விஜயைத் தொலைபேசியில் அழைத்துத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

கே. அண்ணாமலை வாழ்த்து

வாரிசு அரசியல் இனி இல்லை என்பதை மக்கள் தீர்ப்பு உணர்த்துவதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, அடுத்த தலைமுறை மாற்றத்திற்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

விஜய் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவார் எனத் தெரிவித்துள்ள அவர், தோல்வியடைந்தவர்கள் கவலை கொள்ளாமல் மக்கள் பணியைத் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

செல்வப்பெருந்தகை வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம் வாழ்த்து

தமிழகத்தில் மக்கள் தேர்தல் வாயிலாக ஓர் அமைதிப் புரட்சியை ஏற்படுத்தி, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை அசைத்துப் பார்த்துள்ளதாகப் பாராட்டியுள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து

முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது ஈர்க்கக்கூடிய சாதனை. ”பொது வாழ்க்​கை​யில் புதிய அத்​தி​யா​யத்தை வெற்​றிகர​மாக தொடங்கியுள்ள சகோ​தரர் விஜய்க்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

பவன் கல்யாண் வாழ்த்து

ஆந்திர துணைமுதல்வர், ஜனசேன கட்சித் தலைவர் பவன் கல்யாண், விஜய் பெரும்​பான்​மை​யான மக்​களின் மனதை வென்​று, வெற்​றிக் கனியை பறித்​துள்​ளார்.

கட்​சியை தொடங்​கிய சிறிது காலத்​திலேயே மாபெரும் வெற்​றியை ருசித்த விஜய்யை நான் மனதார வாழ்த்​துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

=====