ஓபிஎஸ் நிலைப்பாடு
ops political history அதிமுக கட்சியில் மாபெரும் ஆளுமையாகவும், முன்னாள் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம் எனும் ஓபிஎஸ். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இறப்புக்கு பிறகு அதிமுக என்னும் கட்சி பிளவுபெற்று நலிவடைந்தது. இதற்கு பிறகு யாருக்கு அந்த முதலமைச்சர் பதவி, என கட்சிக்கு உள்ளேயே பெரும் பிரளயம் ஏற்பட்டு, கட்சி விரிசலடைந்தது. இதனால், அவ்வப்போது அதிமுகவின் கட்சி பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி கட்சியையும், அதிமுக கட்சியின் ஆட்சி அதிகாரத்தை அவர் எடுத்துகொண்டு, பயணப்பட்டார்.
இதனால் கட்சிக்குள்ளேயே இருந்த ஆளுமைகள் சிலர் அவர்களே வெளியேறினார், சிலரை எடப்பாடி பழனிசாமி வெளியேற்றினார். ஒட்டு மொத்தமாக அதிமுக கட்சியின் நிலமை கேள்விக்குள்ளானது. இதனால் தொடர்ந்து 2 முறை அதிமுகவால், முதலமைச்சர் அரியாசனம் ஏற முடியவில்லை இதற்கு ஆட்சியின் உட்கட்டமைப்பில் பிளவு ஏற்பட்டதே காரணம் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஓபிஎஸ் அரசியல் நிலவரம்
இதன் பிரதிபலிப்பாக, அதிமுக கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகி, வெளியேறும் நிலமை உறுதியானது. இதில் இருந்து ஓபிஎஸ் அரசியல் பயணம், அள்ளாட ஆரம்பமாகி சரிவை தொட ஆரம்பித்தார். இதனால், பல வித விமர்சனங்களுக்கும் உள்ளாகிய அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டும் பதலளித்து, சில வற்றை புறக்கணித்து நடையை கட்டினார்.
இந்நிலையில், வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக, பாஜக என எண்டிஏ கூட்டணி அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன் என பலப்பட்டு திமுகவை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. இதற்கிடையில் விஜயின் புதிய கட்சியான தவெகவும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ளதால், வருகிற சட்டமன்ற தேர்தல் களம், கடும் போட்டி நிலவும் ஆடுகளமாகவே காட்சியளிக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை என்பதே உறுதி நிலைப்பாடு. இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வத்திடம் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பும் தொடர் கேள்விக்கு இன்று வரை நிலையான பதில் இல்லை, இதுவே இவரின் தேர்தல் நிலைப்பாடிற்கு பெரும் கேள்வியை எழுப்பி, அவரின் நிலையை வெளிப்படுத்தி வருகிறது.
பன்னீர்செல்வத்தை விட்டு விலகும் ஆதரவாளர்கள்
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நடத்தி வரும் ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், அவரது ஆதரவாளரான ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தர்மர் எம்பியின் பதவிக்காலம் 2028 வரை இருப்பதால் அதிமுகவிலேயே தொடர்ந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளார்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஆவின் இயக்குனராக இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் அதிமுகவில் ஐக்கியமாக உள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் எதிர்காலம் மற்றும் கூட்டணி குறித்து முடிவு எடுக்காமல் ஓபிஎஸ் திணறி வருவதால், அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு வெளியேறுவதால் கூடாரம் காலியாகி வருகிறது என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.
ஓபிஎஸ் காலியா? அல்லது ஜாலியா
இந்த நிலையில், திமுக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தேர்தல் நிலைப்பாடு குறித்து விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் நெருக்கடியில் ஓபிஎஸ் சிக்கிதவிப்பதால், இவரின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு எந்த கட்சியில் எப்படி இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. எனவே, பொருத்திறுந்து பார்க்கலாம், ஓபிஎஸ் காலியா? அல்லது ஜாலியா என்று.