Gem Veeramani Case Special SIT Formed: All Women Police Team to Investigate
சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு
சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வழக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க 4 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்தும் பெண் அதிகாரிகள் கொண்ட குழு
இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு முற்றிலும் பெண் அதிகாரிகளைக் கொண்ட குழுவாக நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கூடுதல் ஆணையர் தேன்மொழி, இணை ஆணையர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி மற்றும் கீதாஞ்சலி ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் கண்காணிப்பு
இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு சென்னை காவல் ஆணையரின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாரபட்சமின்றி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
முக்கியப் புள்ளிகள் சிக்க வாய்ப்பு
இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்து வருவதால், பல முக்கியப் பெரும்புள்ளிகள் இதில் சிக்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. நியாயமான மற்றும் விரிவான விசாரணைக்கு இக்குழு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் மாற்றம்
இவ்வழக்கு தொடர்பாக ஏடிஜிபி அருண் மற்றும் ஐஜிபி கண்ணன் ஆகியோர் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தமிழக அரசு அதிரடி:அருண் ஐபிஎஸ்,கோவை காவல் ஆணையர் கண்ணன்,ஏசிபி யாஸ்மின் மீது நடவடிக்கை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
======