Get Your Digital Driving Licence Immediately After Passing the Driving Test Google
தமிழ்நாடு

”செப்.15 முதல் டிஜிட்டல் லைசென்ஸ்” : சட்டப்பேரவையில் விஜய் அசத்தல் அறிவிப்பு...

டிரைவிங் டெஸ்டில் தேர்ச்சி பெற்றவுடன் டிஜிட்டல் லைசென்ஸ்; பொதுமக்களுக்கு எளிதாகும் போக்குவரத்து சேவைகள்...

NARENDRAN K

சட்டமன்றத்தில் விஜய் அறிவிப்பு :

தமிழகத்தில் போக்குவரத்து துறையை நவீனமயமாக்கும் நோக்கில் முக்கிய அறிவிப்பை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, ஓட்டுநர் தேர்வில் (Driving Test) தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அதே நாளில் டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

QR குறியீட்டுடன் பாதுகாப்பான ஆவணங்கள் :

புதிய டிஜிட்டல் லைசென்ஸ் மற்றும் RC ஆவணங்களில் QR குறியீடு இடம்பெறும்.

இதன் மூலம் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆவணங்களின் உண்மைத்தன்மையை உடனடியாக சரிபார்க்க முடியும்.

செப்டம்பர் 15 முதல் அமல் :

இந்த திட்டமானது வரும் செப்டெம்பர் மாதம் 15ல்- இருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே இந்த திட்டமானது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு முன்பாக எடுத்த பின்பும் அது நம் கையில் கிடைக்க சில காலங்கள் அதாவது ஒரு வாரம் முதல் ஒரு மாத காலங்கள் ஆகும் .

பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் :

டிஜிட்டல் லைசென்ஸ் திட்டம் மூலம் RTO அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறையும். ஆவணங்களை இழக்கும் அபாயமும் தவிர்க்கப்படும்.

மேலும், பொதுமக்கள் தங்களது மொபைல் போனிலேயே தேவையான ஆவணங்களை வைத்துக்கொண்டு பயணிக்க முடியும்.

போக்குவரத்து சேவைகளில் புதிய அத்தியாயம் :

தமிழக அரசின் இந்த முயற்சி, போக்குவரத்து சேவைகளை மேலும் எளிமைப்படுத்தி, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உயர்த்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் ஆளுமை நோக்கில் தமிழகத்தின் அடுத்த கட்ட முன்னேற்றமாக இந்த திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

============