G.K. Mani's son, Tamil Kumaran, got a seat in just one week after joining the Congress. What is the background?  google
தமிழ்நாடு

காங்கிரஸில் சேர்ந்த ஓரிரு நாளில் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு சீட் : பென்னாகரத்தில் போட்டி... பின்னணி என்ன ?

பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் கடந்த வாரம் டெல்லி சென்று காங்கிரஸில் இணைத்து கொண்ட நிலையில் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Rohini

காங்கிரஸில் இணைந்த தமிழ்க்குமரன்

பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் கடந்த வாரம் டெல்லி சென்று காங்​கிரஸ் கட்​சி​யில் தன்னை இதனால், அதிர்ச்சி அடைந்த ராம​தாஸ், தமிழ்க்​குமரனை பாமக-​வில் இருந்து நீக்​கு​வ​தாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

இணைந்த ஒரே வாரத்தில் ,கட்சியில் சீட்

காங்​கிரஸ் கட்​சி​யில் இணைந்த ஒரே வாரத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்​குமரனுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் வழங்கப்பட்டுள்ளது .

அதன்படி காங்​கிரஸ் வேட்​பாளர்​கள் பட்​டியலில் தமிழ்க்​குமரனுக்கு பென்​னாகரம் தொகுதி ஒதுக்​கப்​பட்​டது. கட்​சி​யில் இணைந்த ஒரே வாரத்​துக்​குள் தமிழ்க்​குமரனுக்கு தொகுதி ஒதுக்​கீடு செய்​தது, காங்​கிரஸ் கட்​சி​யில் பெரும் விவாதப்​பொருளாகி​யுள்​ளது.

மகனுக்கு எதிராக ,போட்டியிடப்போவதில்லை

ராம​தாஸ் ஆதர​வாள​ராக​வும், தற்​போது பென்​னாகரம் எம்​எல்​ஏ-​வாக​வும் இருக்​கும் ஜி.கே.மணி, ராம​தாஸே சொன்​னாலும், இந்த முறை பென்​னாகரம் தொகு​தி​யில் மகனுக்கு எதி​ராக போட்​டி​யிடப் போவ​தில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ராமதாஸ் கட்சியில் இருப்பது உதவாத காரியம்

பாமக அன்புமணி கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது , ராம​தாஸ் கூட இருந்​தால் ஒன்​றும் நடக்​காது என்​பது ஜி.கே.மணிக்கு தெரி​யும், எனவே தான் மகனின் அரசியல் வாழ்வை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியில் தன மகன் இணைத்தார் என்றும் குறிப்பிட்டுளளார் .

மேலும் பென்​னாகரம் தொகு​தி​யில் மகனை எதிர்த்து ஜி.கே.மணி போட்​டி​யிடப்​போவ​தில்​லை. ராம​தாஸும் பென்​னாகரம் தொகு​திக்கு வேட்​பாளரை அறிவிக்க வாய்​ப்பு இல்​லை என்றும், தெரிகிறது

=======