தமிழ்மாநில காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
GK Vasan Announced TMC Candidate List 2026 : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 23 -ல் சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்தமாதம் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் களம் விறுவிறுபாக இயங்கி வருகிறது .
விறுவிறுப்பாக இயங்கும் அரசியல் கட்சிகள்
அந்த வகையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகள், கூட்டணி முடிவு, வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு என மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
ஜி.கே.வாசம் செய்தியாளர் சந்திப்பு
அந்த வகையில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ளார்.
தாமரை சின்னத்தில் போட்டி
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரசுக்கு அதிமுக 5 தொகுதிகளை ஒதுக்கி இருந்தது. இந்த ஐந்து தொகுதிகளிலும் அக்கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்று ஜி.கே. வாசன் முன்னதாகவே அறிவித்திருந்தார்.
தமாகா வேட்பாளர் பட்டியல்
வேட்பாளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியை தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி
1.ஒட்டன்சத்திரம் - விடியல் சேகர்
2. ஈரோடு மேற்கு - யுவராஜா
3.ராணிப்பேட்டை - கார்த்திகேயன்
4.கிள்ளியூர் - நிதின் சைமன்
5. கும்பகோணம் - அசோக் குமார் என ஐந்து தொகுதி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
தமிழ் மாநில கான்கிரசிற்கு சைக்கிள் சின்னம் கிடைக்காததால் பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.