https://x.com/GK__Vasan
தமிழ்நாடு

என்டிஏ.வில் குழப்பம் இல்லை - கூட்டணி ஆட்சி பற்றி வாசன் விளக்கம்

தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையுடன் இருப்பதாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

Kannan

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வலுவான கூட்டணி என்றார். இதில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக உள்ளிட்ட கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

எங்கள் கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கூட்டணி ஆட்சி பற்றி அண்மைக்காலமாக அதிகம் பேசப்பட்டு வருகிறது. மக்கள் விரோத திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்பது எல்லோருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் வலுவிழந்து வருகிறது. அரசுத் தேர்வுகளில் அரசியல் கலப்பில்லாத கேள்விகள் மட்டுமே இடம்பெற வேண்டும். இவ்வாறு ஜி.கே. வாசன் பதிலளித்தார்.

====