Gold and silver prices have hit new highs, shocking the common man 
தமிழ்நாடு

தங்கம் சவரன் ரூ.1,04,000 : உச்சத்தில் வெள்ளி கிலோ ரூ.2,74,000

Gold, Silver Rate Today in Chennai : தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டு, சாமான்ய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Kannan

தங்கம், வெள்ளி விலையேற்றம்

Gold, Silver Rate Today in Chennai : சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும், தங்கத்தை குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு

தமிழகத்தில் நேற்று முன்தினம் ஆபரண தங்கம் கிராம் 12 ஆயிரத்து 820 ரூபாய்க்கும், சவரன், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 12 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு, 9 ரூபாய் உயர்ந்து, 254 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 9,000 ரூபாய் உயர்ந்தது.

சவரன் ரூ.1,04,000

இந்நிலையில் இன்று (டிசம்பர் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹14,182 ஆக உள்ளது, 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹10,850 ஆகவும் உள்ளது.

புதிய உச்சம் தொட்ட வெள்ளி

வெள்ளி விலை முன் எப்போதும் இல்லாக அளவு கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 274 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிலோ ரூ. 2,74,000

கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ, 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கு(Silver Rate Per KG in Chennai) விற்பனை ஆகிறது. கடந்த சில தினங்களாக தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்து. சாமான்ய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.