Gold Rate Today Reached New High Of Rupees 75000 in Chennai 
தமிழ்நாடு

Gold Rate : 75,000ஐ தாண்டியது தங்கம் விலை : வரலாறு காணாத உச்சம்

Gold Rate Today in Chennai : தங்கம் விலை சவரன் 75 ஆயிரம் ரூபாயை தாண்டி, புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

Kannan

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை :

Gold Rate Today in Chennai : இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், ரஷ்யா-உக்ரைன் போர், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் போன்ற காரணங்களால் விலையில் அடிக்கடி மாற்றங்கள் இருந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் சற்று குறைந்த தங்கம் விலை, இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகிறது.

புதிய உச்சத்தில் தங்கம் விலை :

அந்த வகையில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டு, இல்லத்தரசிகளை அதிர்ச்சியை அடைய வைத்துள்ளது. ஆம், ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 75 ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது(Gold Price Today). இதேநிலை தொடர்ந்து சில மாதங்களில் ஒரு சவரன் ஒரு லட்சத்தை தொட்டு விடவும் வாய்ப்புகள் உள்ளன.

ஒரு சவரன் ரூ.75,040 :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒருசவரன் ரூ.75,040க்கு விற்பனையாகிறது(Chennai Gold Rate Today). ஒரு கிராம் ரூ.9,380க்கும் சவரன் ரூ.75,040-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 10,223-க்கும், ஒரு சவரன் ரூ. 81,864க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,730-க்கும், ஒரு சவரன் ரூ. 61,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஜூன் 14ம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.9,320க்கும், சவரன் ரூ.74,560-க்கும் விற்பனையானதே சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்பொது முறியடிக்கப்பட்டு இருக்கிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 129 ஆகவும்(Silver Rate Today in Chennai), ஒரு கிலோ வெள்ளி விலை ரூ, 1,29,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

====