Gold prices drop sharply: Rs. 1,680 decline per sovereign; Following gold, the price of silver has also dropped significantly. jewelry enthusiasts delighted!
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று அதிரடியாகக் குறைந்து சவரன் 1 லட்சத்து 7 ஆயிரத்திற்கு கீழ் இறங்கியுள்ளது.
சர்வதேசப் போர்ப் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இந்த வாரம் தங்கம் விலை நிலவரம்
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.
ஆனால் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,08,480-க்கும், ஒரு கிராம் ரூ. 13,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 1,680 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ. 1,06,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ. 210 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 13,350-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கடும் வீழ்ச்சி
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
சில்லறை வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து, ஒரு கிராம் ரூ. 240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கட்டி வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 10,000 வரை அதிரடியாக குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 2.40 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
தங்கம் மற்றும் வெள்ளி விலை தற்போது சரிவைச் சந்தித்து வருவது பொதுமக்களிடையேயும், குறிப்பாக திருமண சுபகாரியங்களுக்கு நகை எடுக்கக் காத்திருப்போர் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
====