உச்சம் தொட்ட தங்கம் விலை
Gold Silver Rate Today in Chennai : தங்கம், வெள்ளி மீது, சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவிக்கின்றன. அனைவரையும் விஞ்சும் வகையில் சீனா, தங்கத்தில் பெரிய முதலீட்டை செய்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான பல்வேறு நாடுகளின் ரூபாய்களில் ஏற்படும் சரிவு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.
ஒரு லட்சத்தை கடந்த தங்கம்
தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 24) ஆபரண தங்கம் கிராம், 12,800 ரூபாய்க்கும், சவரன், 1,02,400 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 244 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (டிசம்பர் 25), தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 12,820 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 1,02,560 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சவரனுக்கு ரூ.560 உயர்வு
இந்நிலையில் இன்று (டிசம்பர் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,890க்கு விற்பனை ஆகிறது.
24 கேரட் தங்கம் விலை 76 ரூபாய் உயர்ந்து 14,062 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹10,760 ஆகவும் உள்ளது.
புதிய உச்சத்தில் வெள்ளி
தங்கத்தின் விலை ஒருபக்கம் அதிகரித்த வ்ண்ணம் இருக்கும் நிலையில், அதற்கு போட்டியாக, வெள்ளி விலையும் நாளும் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இன்றைய தினம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ஒரு கிராம் ரூ.254க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கிலோ ரூ.2.50 லட்சத்தை தாண்டியது
விலை கிலோவுக்கு 9 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தொடர்ந்து வெள்ளி, தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வருவது சாமான்ய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
முதலீடு அதிகரிப்பே விலை உயர்வுக்கு காரணம்
விலையேற்றத்திற்கான காரணம் குறித்து கருத்து தெரிவிக்கும் தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள், ”சர்வதேச முதலீட்டாளர்களின் பெரும்பாலான முதலீடுகள் தங்கமாகவே உள்ளது. வெள்ளியிலும் அதிக முதலீடுகள் குவிந்து வருவதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தங்கம் விலை குறையாது
தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழே வரும் வாய்ப்பு மிக மிக குறைவு. தங்கம் விலை குறையும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று” தெரிவிக்கின்றனர்.
================