உலக நாடுகள் தங்கத்தில் முதலீடு :
Gold Silver Price Today in Chennai : அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை உலக அளவில் எண்ணற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகள் தங்களிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பில் ஒரு பகுதியை தங்கமாக மாற்றி சேமித்து வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்து வருவதும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
நாள்தோறும் புதிய உச்சம் :
கடந்த வாரம் படிப்படியாக குறைந்த தங்கம், இந்த வாரம் விலையேற்றத்துடன் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,795 ரூபாய்க்கும், சவரன் 78,360 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 137 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தங்கம் விலை நேற்று, சவரனுக்கு ரூ.560 உயர்ந்து: ஒரு சவரன் ரூ.78,920க்கும், கிராம் 9,865 ரூபாய்க்கும் விற்பனையானது.
சவரன் ரூ.80,040 :
இந்தநிலையில், இன்றைய தினமும் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராம் ரூ.10,005 :
கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,005க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்தை கடந்து இருப்பதால் சாமான்ய மக்கள் அதிர்ச்சியை அடைந்துள்ளனர். முகூர்த்த காலத்தில் வரலாறு காணாத விலையேற்றம்(Today Gold Rate) அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து இருக்கிறது.
20 நாட்களில் ரூ.20,000 உயர்வு :
கடந்த 8 மாதங்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.20 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
24 காரட் தங்கம் (தூய தங்கம்) ஒரு கிராம் ரூ.10,914க்கும், சவரன் ரூ.87,312க்கும் விற்பனையாகிறது.
18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,121க்கும் சவரன் ரூ.64,968க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் :படிக்க : 79,000ஐ நெருங்கிய தங்கம் : கிராம் 10 ஆயிரத்தை தொடுவதால் அதிர்ச்சி
வெள்ளி விலையும் உயர்வு :
தங்கத்தின் விலையேற்றம் வெள்ளி விலையிலும் எதிரொலித்து வருகிறது. அதன்படி, ஒரு 138 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 1,38,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்தாலும், நீண்ட கால முதலீட்டை விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
====