₹500 Crore Waterbody Restoration Project Launched; Minister Anand Inaugurates Works Google
தமிழ்நாடு

500 கோடியில் நீர்நிலைகள் சீரமைப்புக்கு திட்டம் : அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார்..!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் தொடக்கம் என அரசாங்கம் அறிவிப்பு...

NARENDRAN K

500 கோடி நிதி ஒதுக்கீடு :

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் இப்பொழுது அமைந்திருக்கக்கூடிய தவெக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

அதன் ஒரு பகுதியாக நீர்வளத்துறை அமைச்சர் திரு.ஆனந்த் தலைமையில் 500 கோடி ரூபாய் நீதி ஒதுக்கீடு செய்து நீர்நிலைகள் மற்றும் கால்வாய்கள் போன்ற பல்வேறு நீர் சம்மந்தப்பட்ட வளர்ச்சி பணிகள் முடிகிவிடப்பட்டிருக்கிறது

அதன் ஒரு பகுதியாக இன்று அத்திட்டத்தை இன்று அமைச்சர் ஆனந்த் அவர்களே நேரில் சென்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு என்ன பயன் :

இத்திட்டத்தின் மூலம் நீர்நிலைகளில் தேங்கியுள்ள மண் மற்றும் வண்டல் உள்ளிட்டவற்றை அகற்றி, நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைப்பதன் மூலம் மழைக் காலங்களில் ஏரிகள், குளங்களுக்கு தண்ணீர் தடையின்றி சென்றடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், மழைநீரை முறையாக சேமித்து நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பது மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும்

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என ஊரக வளர்ச்சி மற்றும் நிறுவனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிராமப்புறங்களில் இருக்க கூடிய விவசாயிகளுக்கு நன்மை:

இதன் மூலம் விவசாயத்துக்கும், கிராமப்புறங்களின் குடிநீர் தேவைக்கும் தேவையான நீர்வளத்தைப் பாதுகாக்க முடியும். மேலும் பருவமழையின் போது நீர்வரத்து அதிகரிக்கும் பகுதிகளில் நீர் தடையின்றி செல்லும் வகையில் வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்படுவதால் வெள்ளநீர் தேங்கும் வாய்ப்பையும் குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள புத்தூர் கிராம ஏரி வரத்துக் கால்வாய் புனரமைப்புப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

ரூ.3.19 கோடி மதிப்பீட்டிலான இப்பணியை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மண்வெட்டியுடன் நேரடியாகப் பணியைத் தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த திட்டம் தொடக்கம் :

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதற்கட்டமாக 52 புதிய குளங்கள் மற்றும் 447 நீர்வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ், ஊராட்சித் துறை ஆணையர் அமுதவல்லி உள்ளிட்டோர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.