Government Job Opportunity at the Child Protection Centre: Apply Immediately! Full Details. source: google
தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அரசு வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பியுங்கள்! முழு விவரம்...!

சிவகங்கை மாவட்ட மிஷன் வாட்சல்யா திட்டத்தின்கீழ் பாதுகாப்பு அலுவலர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Kavitha prasanna

Government Job Opportunity at the Child Protection Centre: Apply Immediately! Full Details...!

ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியிடங்கள்

தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் சிவகங்கை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (District Child Protection Unit) காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'மிஷன் வாட்சல்யா'

சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் 'மிஷன் வாட்சல்யா' திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்த அலகில் முற்றிலும் தற்காலிகமாக, தொகுப்பூதியத்தில் பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடங்களின் விபரங்கள்

1. பணி: பாதுகாப்பு அலுவலர் (Protection Officer - Institutional Care / Non-Institutional Care)

காலிப்பணியிடம்: 01

சம்பளம்: மாதம் ரூ. 27,804/-

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி , சமூகவியல் , குழந்தை வளர்ச்சி, மனித உரிமைகள், பொது நிர்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம் அல்லது சமுதாய வள நிர்வாகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாற்றுத் தகுதி / அனுபவம்

அல்லது ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்புடன் பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி / சமூக நலன் பணிகளில் திட்டமிடல், நடைமுறைப்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையிடுவதில் இரண்டு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி கையாளுவதில் முழுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

2. பணி: புறத் தொடர்பு பணியாளர் (Outreach Worker)

காலிப்பணியிடம்: 01

சம்பளம்: மாதம் ரூ. 11,574/-

கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன்னுரிமை: குழந்தைகள் தொடர்பான பணிகளில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், சிவகங்கை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sivagangai.nic.in என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் (Self-Attested Copies) இணைத்து, நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

அறை எண்: 131, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

சிவகங்கை – 630 562.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-06-2026 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் அலுவலகத்தை சென்றடைய வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04575-240166.

======