Greater Chennai Corporation Waste Collection From House on Every Saturday in Chennai 
தமிழ்நாடு

மாநகராட்சி இனி வீட்டை சுத்தம் செய்யும்: சனிக்கிழமைக்கு தயாராகுங்க!

Chennai : சென்னையின் சுத்தம் மேலும் ஒரு படிக்கு முன்னேறி வீட்டின் சுத்தத்திற்கு சென்றுள்ளது என்று போற்றும் வகையில், சென்னை மாநாகராட்சியில் இருந்து வீட்டிற்காக புதிய சுத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Bala Murugan

சுத்தமே சுகாதாரம் :

Greater Chennai Corporation Waste Collection : ஒரு நாடோ, நகரமோ, ஊரோ என அனைத்து இடங்களிலும் சுத்தம் என்பதே இங்கு சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்கு ஒரு முக்கிய ஆதாயமாகும். அப்படி இருக்கையில் மத்தியம், மாநிலம் என்று பிரிக்கையில், மாநிலத்திலும் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து பிரிவுகளில் இருந்தும் சுத்தம் செய்வதற்கு என தனிப்பிரிவு கொண்ட துப்புறவுபணியாளர்கள் பணியமர்த்த்பட்டுள்ளனர். அப்படி இருக்கையில் அவர்கள் தெருக்களில் வீட்டின் வாசல்களுக்கு வந்து குப்பைகளை பெற்று செல்வர். இதுவே நம் அன்றாட சுகாதாரம் மற்றும் சுத்தத்திற்கு ஒரு முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது.

மாநகராட்சியின் வீட்டு சுத்தம் :

சுத்தம்செய்வதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வகையில், சென்னை மாநகராட்சி ஊழியர்களே வீட்டிற்கு வந்து பழைய பொருள்களை சேகரித்துக்கொள்ளும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் தேவையற்ற நாற்காலிகள், படுக்கைகள், மேசைகள், துணிகள், மின்னணு பொருள்கள் போன்றவற்றை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும் சிறப்பு கழிவு சேகரிப்பு சேவையின் மூலம் பாதுகாப்பாக ஒப்படைக்க மாநகராட்சி வலியுறுத்துகிறது.

புதிய நடைமுறை எப்படி?

மாநகராட்சியின் இந்த புதிய சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது 9445061913 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது நம்ம சென்னை செயலியில்(Chennai Corporation WhatsApp Number) பதிவு செய்ய வேண்டும். பின்னர், உங்கள் கோரிக்கை சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அதிகாரிக்குத் தெரிவிக்கப்படும், சனிக்கிழமைகளில் உங்கள் வீட்டிற்கு வரும் மாநகராட்சி வாகனங்களில் வீட்டிலுள்ள பழைய பொருள்களைச் சேகரித்துக் கொடுக்கலாம்.

மாநகராட்சி வலியுறுத்தல்

இதனால்,உங்கள் இல்லத்தின் சுத்தம் வெறும் குப்பைகளை தாண்டி அண்டி இருந்த கழிவுளும் வெளியேறி வீட்டின் சுத்தம் மேலும் மெருகேறும். சென்னை மாநகராட்சியின் இந்தச் சேவை சனிக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும். தங்களது இல்லங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருள்கள் மாநகராட்சியால் பாதுகாப்பாக எரிக்கப்படும் என்றும் தேவையற்ற மற்றும் பழைய பொருள்களைச் சரியான முறையில் அப்புறப்படுத்தப்படும்.

மேலும் படிக்க : Chennai Iron Flyover: சென்னையில் முதல் இரும்பு பாலம்.! 164 கோடியா?

சென்னையைத் தூய்மையாக வைத்திருக்க மக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.