GST tax reduction coming to effect, prices of Aavin dairy products reduced 
தமிழ்நாடு

GST 2.0: வரி சீர்திருத்த எதிரொலி : ஆவின் பொருட்கள் விலை குறைப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், ஆவின் பால் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன.

Kannan

இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி :

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு நான்கு அடுக்குகளாக அமலில் இருந்தது. அத்தியாவசிய, மருந்து பொருட்களின் விலையை குறைக்கும் வகையில், ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்ற மத்திய பாஜக அரசு, பல்வேறு பொருட்களின் விலையை குறைக்கும் வகையில் வரி விதிப்பை 2 அடுக்குகளாக மாற்றி அமைத்து உள்ளது.

375 பொருட்களின் விலை குறைப்பு :

இதன் காரணமாக 375 பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. பல்வேறு பொருட்களுக்கு பூஜ்யம் சதவீதம் மட்டுமே வரி அதாவது, வரியே இல்லை என்பதால், சாமான்ய மற்றும் நடுத்தர மக்களுக்கு கூடுதல் பலன்கள் சென்று சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ஆவின் பொருட்கள் விலை குறைகிறது :

ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று அமலுக்கு வந்திருப்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார். பல்வேறு நிறுவனங்களும் தங்கள் உற்பத்தி பொருட்களின் விலையை குறைத்துள்ளன. தமிழகத்தில் பால், பால் பொருட்களை விற்பனை செய்யும் ஆவின் நிறுவனமும், தங்கள் தயாரிப்புகளின் விலையை குறைத்து, புதிய விலைப்பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

ஆவின் விலைக் குறைப்பு விலைப்பட்டியல் :

1. ஒரு லிட்டர் நெய் விலை ரூ.690ல் இருந்து ரூ.650 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

2. 50 மி.லி.நெய் ரூ.45 ஆகவும், 5 லிட்டர் நெய் ரூ.3,300ஆ கவும், 15 கிலோ நெய் ரூ.10,900 ஆகவும் விலை குறைந்து இருக்கிறது.

3. ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பனீர் ரூ.110க்கும், ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட 500 கிராம் பனீர் ரூ.275க்கும் விற்பனை செய்யப்படும்.